அமித் ஷா வருகை திமுக ஆட்சிக்கு முடிவுரை: நயினார் நாகேந்திரன் கருத்து

அமித் ஷா வருகை திமுக ஆட்சிக்கு முடிவுரை: நயினார் நாகேந்திரன் கருத்து
Updated on
1 min read

புதுக்கோட்டை: ​தி​முக ஆட்​சிக்கு முடிவுரை எழுதவே அமித் ஷா தமிழகம் வந்​துள்​ளார் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். நயி​னார் நாகேந்​திரன் மேற்​கொண்ட பிரச்​சா​ரப் பயணத்​தின் நிறைவு விழா பொதுக்​கூட்​டம் புதுக்​கோட்​டை​யில் நேற்று மாலை நடை​பெற்​றது.

இதில் அவர் பேசி​ய​தாவது: பிரச்​சா​ரப் பயணத்​தின்​போது, திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்ப வேண்​டும் என்று மக்​கள் கோயி​லில் வணங்​கிக் கொண்​டிருப்​பதை உணர்ந்தேன். திமுக ஆட்​சி​யில் எப்​போதும் மக்​களுக்கு பயம்​தான் உள்​ளது. எனவே, திமுக ஆட்​சியை அகற்​று​வதற்கு அனை​வரும் விரதம் இருந்​து, அல்​லும் பகலும் பாடுபட வேண்​டும்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு செந்​தில் பாலாஜி​தான் காரணம். திமுக ஒரு​போதும் மக்​கள் சக்​தி​யுடன் ஆட்​சி​யைப் பிடித்​தது இல்​லை. திமுக ஆட்​சிக்கு முடிவுரை எழுதவே அமித் ஷா தமிழகம் வந்​துள்​ளார். வரும் தேர்​தலில் ஆட்சி மாற்​றம் உறு​தி​யாக ஏற்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை பேசும்​ போது, “நாட்​டிலேயே காவல் துறை​யினருக்​குக் கூட பாது​காப்பு இல்​லாத மாநில​மாகதமிழகம் விளங்​கு​கிறது. திமுகவை ஆட்​சி​யில் இருந்து அகற்ற வேண்​டும் என்று அனைத்து தரப்பு மக்​களும் எதிர்​பார்க்​கிறார்​கள்.

கடந்த தேர்​தலின்​போது திமுக அளித்த வாக்​குறு​தி​களில் 5 சதவீதம்​தான் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது” என்​றார். பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் பேசும்​போது, “தமிழகத்​தில் பல்​வேறு கோரிக்​கைகளுக்​காக அனைத்​துத் தரப்​பினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இப்​படி இருந்​தால் திமுக​வி​னால் எப்​படி மீண்​டும் ஆட்​சிக்கு வர முடி​யும்? போதைப்​பொருள் புழக்​கத்தை கட்​டுப்​படுத்த திமுக அரசு எந்த முயற்​சி​யை​யும் எடுக்​க​வில்​லை. தி​முக அரசு அறி​வித்​துள்ள ஓய்​வூ​தி​யத் திட்​டம் என்ன வகை​யானது என யாருக்​கும்​ புரிய​வில்​லை” என்​றார்​.

அமித் ஷா வருகை திமுக ஆட்சிக்கு முடிவுரை: நயினார் நாகேந்திரன் கருத்து
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினரின் ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்: பழனிசாமி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in