அண்ணாமலைக்கு ‘சீட்’ மறுப்பு ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்

அண்ணாமலைக்கு ‘சீட்’ மறுப்பு ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்
Updated on
1 min read

சென்னை: அண்ணாமலை பெயர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, ‘இது அகில இந்திய தலைமை எடுத்த முடிவு’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு ‘சீட்’ மறுப்பு ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் தமிழிசை, சாத்தூரில் நயினார் போட்டி

அதன்படி, நயினார் நாகேந்திரன் சாத்தூரிலும், தமிழிசை சவுந்தர்ராஜன் மயிலாப்பூரிலும், எல்.முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும் போட்டியிடுகின்றனர். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “பாஜகவின் அகில இந்திய தலைமை 27 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் சட்டப்பேரவை தலைவர்களை பெறுவோம்.

மீண்டும் எல்.எல்.ஏக்களுக்கும், இணை அமைச்சருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தலைமை சொல்வதை நாங்கள் செய்வோம்” என்றார்.

அப்போது, ’தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவதாக சொன்னீர்கள், ஆனால் பெயர் இடம்பெறவிலையே’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘இது அகில இந்திய தலைமை எடுத்த முடிவு’ என பதிலளித்துளார்.

இதனிடையே அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பிரதமர் மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. தேசம் இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்டிஏ கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற என்டிஏ வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ‘சீட்’ மறுப்பு ஏன்? - நயினார் நாகேந்திரன் பதில்
கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ சாத்தியமா? - திருச்சி மேற்கு தொகுதி ரவுண்ட்-அப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in