“சிலர் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டாலும் பிரதமரின் தேசப் பணி தொடரும்” - நயினார் நாகேந்திரன்

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: “தொடர் தோல்விகளை ஏற்க முடியாத சிலர், உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட முயற்சித்தாலும் பிரதமரின் தேசப் பணி தொய்வின்றி தொடரும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில், “2014 முதல் 2026 வரையிலான நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. பிரதமர் மோடி, நாட்டின் பிரதமராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், உட்கட்டமைப்பின் அனைத்து பரிமாணங்களிலும் நமது நாடு மெருகேறியுள்ளது.

கடந்த 2014 முதல், சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடங்கள் (100 சதவீதம்), விரைவுச்சாலை நெட்வொர்க் (85 சதவீதம்), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் (78 சதவீதம்), ரயில் மின்மயமாக்கல் (69 சதவீதம்), விமான நிலையங்கள் (55 சதவீதம்), மருத்துவக் கல்லூரிகள் (54 சதவீதம்) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள உட்கட்டமைப்பு வளர்ச்சியானது, “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை நோக்கியே நம்மை நகர்த்தி செல்கின்றன.

நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், பெண்களின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி பிரதமர் மோடி எடுக்கும் துணிச்சலான முடிவுகளே, இத்தகைய அபரித வளர்ச்சிக்கான அஸ்திவாரம்.

மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, தெளிவான தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு இயந்திரத்தை முறையாக வழிநடத்தி செல்லும் பிரதமர் மோடியின் சிறந்த தலைமைப் பண்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

தூற்றுவார் தூற்றினாலும், தொடர் தோல்வியை ஏற்க முடியாத சிலர், உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட முயற்சித்தாலும் பிரதமரின் தேசப்பணி என்றும் தொய்வின்றி தொடரும்” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்</p></div>
தமிழகம் தழுவிய போராட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in