

நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்
சென்னை: ‘திமுக அரசின் ஊழல்கள் மக்கள் மன்றத்தில் விரைவில் வெளிப்படுத்தப்படும்’ என்று என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ரூ.1,020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத் துறை புகார் அளித்ததைதொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகாரும் அமைச்சர் நேரு மீது உள்ளது.
மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், காந்தி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி மற்றும் மேயர் பிரியா மீதான ஊழல் மோசடிகளைக் கணக்கிட்டால், பெரிய புத்தகமே வெளியிடலாம்.
பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் விரைவில் வெளிப்படுத்தப்படுவது உறுதி. எனவே, மீண்டும் அரியணை ஏறும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.