அரசு காப்பகங்களில் காணாமல் போகும் சிறுமிகள்: பாதுகாப்பை தீவிரப்படுத்த நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அரசு காப்​பகங்​களில் பெண் குழந்​தைகள் தொடர்ந்து மாய​மாகி வரும் நிலை​யில் பாது​காப்பை தீவிரப்​படுத்த வேண்​டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்​கத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கன்​னி​யாகுமரி, நாகப்​பட்​டினம், சிவகங்கை உள்​ளிட்டமாவட்​டங்​களில் உள்ள அரசுகாப்​பகங்​களில் உள்ள சிறுமிகள் தொடர்ந்து மாய​மாகி வரு​வ​தாக​வும், தப்​பியோடு​வ​தாக​வும் வெளி​யாகி வரும் செய்​தி​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​துகிறது.

ஆண்​டு​தோறும் போக்சோ வழக்​கு​கள் பெரு​கிவரும் நிலை​யில், அரசு காப்​பகங்​களில் இருந்து காணா​மல்​போன குழந்​தைகள் பாலியல் தொழில்​களுக்​காகக் கடத்​தப்​பட்​டன​ரா, இதில் காப்​பகக் கண்​காணிப்​பாளர் உள்​ளிட்ட அரசு அதி​காரி​கள், அரசி​யல்​வா​தி​கள் ஆகியோ​ருக்கு ஏதேனும் தொடர்​பிருக்​கிற​தா, அல்​லது காப்​பகத்​தின் கொடுமை தாங்​காமல் குழந்​தைகள் ஓடி​விட்​டனரா உள்​ளிட்ட பல்வேறு கேள்வி​கள் எழுகின்​றன.

இவ்​விவ​காரத்தை அரசி​யல் வேறு​பாடு​களைக் கடந்து நாம் சிந்​திக்க வேண்​டியது அவசி​யம். தமிழகப் பிள்​ளை​கள் அனை​வரும் தன்னை ‘அப்​பா’என்​றழைக்க வேண்​டும் என ஆசைப்​படும் முதல்​வர் ஸ்டா​லினின் ஆட்​சி​யில் அப்​பாவி குழந்​தைகள் காணா​மல் போவதைத் தடுக்க காப்​பகங்​களில் ஆய்வு செய்​து, குழந்​தைகளின் பாது​காப்பை உறுதி செய்​ய ​வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in