மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு: தமிழக அரசு உத்தரவு

மயில்சாமி அண்ணாதுரை | கோப்புப் படம்
மயில்சாமி அண்ணாதுரை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான பாடத் திட்​டம் படிப்​படி​யாக மாற்​றியமைக்​கப்பட உள்​ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் இஸ்ரோ தலை​வர் நாராயணன், கிரிக்​கெட் வீரர் அஸ்​வின், விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன் உள்​ளிட்​டோர் அடங்​கிய புதிய பாடத் திட்ட வடிவ​மைப்பு உயர்​நிலைக் குழு, வல்​லுநர் குழு அமைக்​கப்​பட்​டது.

அந்த குழு, மேற்​கொள்ள வேண்​டிய மாற்​றங்​களை ஆய்வு செய்​தது. ஆசிரியர்​கள், பெற்​றோர், கல்​வி​யாளர்​கள், மாணவர்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினரின் கருத்​துகளை​யும் பெற்​றது. அதன் அடிப்​படை​யில், பள்​ளிக்​கல்வி மேம்​பாட்​டுக்​கான பரிந்​துரைகள் மற்​றும் புதிய பாடத் திட்​டத்​துக்​கான அறிக்​கையை தயாரித்து அரசிடம் வழங்​கியது. அதைத் தொடர்ந்​து, முதல்​கட்​ட​மாக நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு முதல்​வர் விஜய் தலை​மை​யில் தவெக அரசு பொறுப்​பேற்​றுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறைச் செயலர் சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யுள்​ள​தாவது: பள்ளி பாடத் திட்​டத்தை மேம்​படுத்​தும் வகை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை அரசு அமைத்​துள்​ளது. இதன் தலை​வ​ராக இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை செயல்​படு​வார். விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், சென்னை பல்​கலைக்​கழக இயற்​பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்​லூரி முன்​னாள் பேராசிரியர் சுதந்​திர​முத்து உள்​ளிட்ட 14 பேர் உறுப்​பின​ராக இருப்​பார்​கள். மாநிலக் கல்வி ஆராய்ச்​சி, பயிற்சி நிறுவன இயக்​குநர் இக்​குழு​வின் உறுப்​பினர் - செயல​ராக செயல்​படு​வார். உறுப்​பினர்​களின் பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

தற்​போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் புதிய குழு, 4-ம் வகுப்பு முதல் புதிய பாடத் திட்​டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்​பிக்​கும். குழு​வின் பரிந்​துரைகள் அடிப்​படை​யில் 4-ம் வகுப்பு முதல்​ பிளஸ்​ 2 வரை படிப்​படி​யாக புதி​ய பாடத்​திட்​டம்​ பின்​பற்​றப்​படும்​.

மயில்சாமி அண்ணாதுரை | கோப்புப் படம்
கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in