மத்திய அரசை தட்டிக் கேட்பவர் ஸ்டாலின்: இரா.முத்தரசன் சொல்கிறார்

இரா.முத்தரசன் | கோப்புப் படம்.
இரா.முத்தரசன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

தமிழக நலனுக்கு எதி​ரான மத்​திய அரசின் நடவடிக்​கை​களை தட்​டிக் கேட்​கும் ஸ்டா​லின் முதல்​வ​ராக வர வேண்​டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தெரி​வித்​தார்.

திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்​டி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பாஜக தங்​களது கட்​சியை பலப்​படுத்​திக் கொள்​வதற்​காக மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்​கையை உயர்த்த முடிவு செய்து கொண்டு வரப்​பட்ட மசோ​தாவை, முதல்​வர் ஸ்டா​லின் எடுத்த முயற்சி காரண​மாக இண்​டியா கூட்​டணி கட்​சிகள் ஒருங்​கிணைந்து முறியடித்​துள்​ளன.

இதை பெண்​களுக்கு எதி​ராக இண்​டியா கூட்​டணி கட்​சிகள் துரோகம் இழைப்​ப​தாக பொய் பிரச்​சா​ரம் செய்​கின்​ற​னர். அந்த பிரச்​சா​ரம் எடு​ப​டாது. மத்​திய அரசு தமி​ழ​கத்​துக்கு எதி​ராக நடவடிக்​கை​களை, துரோகங்​களை சுட்​டிக்​காட்​டு​வதற்​குக் கூட அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி திற​னற்​றவ​ராக உள்​ளார்.

அதே நேரத்​தில், முதல்​வர் ஸ்டா​லின் மத்​திய அரசின் துரோக நடவடிக்​கை​கள் அனைத்​தை​யும் தட்​டிக் கேட்​கி​றார். தமி​ழ​கத்​துக்கு இது​போன்று தட்​டிக் கேட்​கின்ற தலை​வர்​தான் வேண்​டும், ஸ்டா​லின் முதல்​வ​ராக வேண்​டும் என்​பதை தமிழக மக்​கள் முடிவு செய்​து​விட்​டனர்.இவ்​வாறு அவர் கூறி​னார்.

இரா.முத்தரசன் | கோப்புப் படம்.
புரட்சிக்குத் தலைமை தாங்குவேன்! - காரைக்குடியில் சீமான் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in