

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட குழுவினர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர்.
பின்னர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எங்கள் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டுமென அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பது குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.
கூட்டணி தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு முத்தரசன், ‘அறிவாலயம் வந்தாலே கூட்டணி பேச தான் வருவோமா? ஏன் பதட்டமான செய்திகளை உருவாக்குகிறீர்கள் ?
நாங்கள் முதல்வரை மக்கள் பிரச்சினைக்காக சந்திக்க வரமாட்டோமா’ என கோபமாக பேசியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.