50-க்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்த நகராட்சி நிர்வாகத் துறை

50-க்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்த நகராட்சி நிர்வாகத் துறை
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் உரிய விதி​முறை​களை பின்​பற்​றாத​தால் 50-க்​கும் மேற்​பட்ட குறுகிய கால ஒப்​பந்​தங்​களை ரத்து செய்து நகராட்சி நிர்​வாகத்​ துறை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்த பின்​னர் நிர்​வாக ரீதி​யாக பல்​வேறு மாற்​றங்​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் வெளி​யிடப்​பட்ட பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் உரிய விதி​களின்​ படி செயல்​படுத்​தப்​பட​வில்லை என அவற்றை தவெக அரசு ரத்து செய்​து​ வரு​கிறது. நகராட்சி நிர்வாகத்துறையை தனது வசம் வைத்துள்ள முதல்வர் விஜய், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன்​தொடர்ச்​சி​யாக தமிழகம் முழு​வதும் பல்​வேறு நகராட்​சிகளில் வெளி​யிடப்​பட்​டிருந்த குறுகிய கால ஒப்​பந்​தங்​களை உரிய விதி​முறை​கள் பின்​பற்​றப்​ப​டாத​தால் நகராட்சி நிர்​வாகத்​ துறை தற்​போது ரத்து செய்​துள்​ளது. நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இந்த விவ​காரங்​களில் ஒப்​பந்த அறி​விப்பு வெளி​யான நாளில் இருந்து அதை சமர்ப்​பிப்​ப​தற்கு 1 முதல் 4 நாட்​கள் வரை மட்​டுமே அவகாசம் தரப்​பட்​ட​தாக​வும், ஒப்​பந்​த​தா​ரர்​கள் அனை​வருக்​கும் சமமான வாய்ப்பு வழங்​கப்​பட​வில்லை எனவும் புகார்​கள் எழுந்​தன.

இதையடுத்து தமிழகம் முழு​வதும் பல்​வேறு நகராட்​சிகளில் வெளி​யிடப்​பட்​டிருந்த 50-க்​கும் மேற்​பட்ட குறுகிய கால டெண்​டர்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக உடுமலைப்​பேட்​டை​யில் 30 குறுகிய கால டெண்டர்களும், கோத்​தகிரி 3, செங்​கதத்​தில் 2 டெண்​டர்​களும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதே​போல் மணப்​பாறை, பெரம்​பலூர்,திரு​வள்​ளூர், திரு​வை​யாறு உள்​ளிட்ட பல்​வேறு நகராட்​சிகளி​லும் 20-க்​கும் மேற்​பட்ட குறுகிய கால டெண்​டர்​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்த டெண்​டர்​கள் கழி​வுநீர் வடி​கால் பராமரிப்​பு, குடிநீர் இணைப்பு வழங்​குதல், வாரச்​சந்தை கடைகள் பராமரிப்​பு, குடிநீர் மற்​றும் அடிப்​படை வசதி​கள் குறித்த பல்​வேறு நகராட்சி பணி​களை மேற்​கொள்​வதற்​காக வெளி​யிடப்​பட்​டிருந்​தன. தொடர்ந்து உரிய விதி​முறை​கள் மற்​றும் நடை​முறை​களை பின்​பற்​றி, தேவை​யான கால அவகாசத்​துடன் புதிய ஒப்​பந்​தங்​கள் வெளி​யிடப்​படும் என்று துறைஅதி​காரிகள்​ தகவல்​ தெரி​வித்​தனர். இதனால் உரிய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றி, தேவையான கால அவகாசத்துடன் புதிய டெண்டர்களை நகராட்சி நிர்வாகத் துறை வெளியிடப்படுமா என்பது குறித்து ஒப்பந்ததாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

50-க்கும் மேற்பட்ட டெண்டர்களை ரத்து செய்த நகராட்சி நிர்வாகத் துறை
“எரிபொருள் விநியோக நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in