தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்பதா? - ஸ்டாலினுக்கு மு.வீரபாண்டியன் எதிர்ப்பு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

பெரம்பலூர்: தவெக ஆட்சி கவிழும் என்ற திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினின் கருத்து ஏற்​புடையது அல்ல என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார்.

பெட்​ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்​தி​ய மத்​திய அரசைக் கண்​டித்​தும், வேளாண் கூட்​டுறவு வங்​கி​களில் விவ​சா​யிகள் பெற்ற கடன்​களை தமிழக அரசு முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வலி​யுறுத்​தி​யும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் தமிழகம் முழு​வதும் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதில் பங்கேற்ற வீரபாண்டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: இடைத்​தேர்​தலில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் நிற்​ப​தற்​கோ, திரா​விட கட்​சிகளுக்கு ஆதர​வான பொது​வான வேட்​பாளர்​களை நிறுத்​துவதற்கோ மறுப்பு தெரிவிக்க விரும்​ப​வில்​லை. தவெக ஆட்சி கவிழும் என ஸ்டா​லின் தெரிவித்​தது ஏற்​புடையது அல்ல. மூத்த அரசி​யல்​வா​தி இது​போன்ற கருத்​துகளை கூறக்​கூ​டாது.

ஜனநாயகத்​தில் யாரும் எந்த கட்​சி​யிலும் சேரலாம். ராஜி​னாமா செய்த அதி​முகஎம்​எல்​ஏக்​கள் ஜனநாயகக் கட்​சிகளை வலுப்​படுத்த வேண்​டும். இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.</p></div>
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in