விமானிகளின் பணிநேர வரம்பு விதிகள்: பிரதமருக்கு மாணிக்கம் தாகூர் எம்​.பி. கடிதம்

விமானிகளின் பணிநேர வரம்பு விதிகள்: பிரதமருக்கு மாணிக்கம் தாகூர் எம்​.பி. கடிதம்
Updated on
1 min read

சென்னை: இந்​திய விமான நிறு​வனங்​களில் பணிநேர வரம்பு விதி​களை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு விருதுநகர் எம்பி மாணிக்​கம் தாகூர் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கத்​துக்கு அவர் அனுப்​பி​யுள்ள கடிதம்: கடந்த ஏப்​.29-ம் தேதி பணி​யில் இருந்​த​போது கேப்​டன் தருண்​தீப் சிங் என்ற விமானி உயி​ரிழந்​தார்.

அதற்கு அடுத்த நாளே (ஏப்​.30) பெங்​களூரு​வில் கேப்​டன் அர்​ஜுன் நாயுடு என்ற விமானி, பணி​யின்​போது கால​மா​னார். மிகக் குறுகிய கால இடைவெளி​யில் நிகழ்ந்த இந்த மரணங்​கள் தற்​செய​லானது அல்ல.

விமானப் போக்​கு​வரத்து துறை​யில் நில​வும் முறையற்ற பணி மேலாண்​மை​யையே இது காட்​டு​கிறது. விமானிகளின் உடல் சோர்​வைக் குறைப்​ப​தற்​காக கொண்டு வரப்​பட்ட பணிநேர வரம்பு விதிகள், விமான நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள பல்​வேறு சலுகைகளால் நீர்த்​துப் போயுள்​ளன.

இடைக்​கால நடவடிக்​கைகளாக கருதப்​பட்ட இந்த சலுகைகள், தற்​போது நிரந்தர நடை​முறை​யாக மாற்​றப்​பட்​டு, விமானிகள் ஓய்​வின்றி பணிபுரி​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

விமானிகள் தங்​களுக்கு ஏற்​படும் சோர்வு குறித்து அளிக்​கும் புகார்​கள் பெரும்​பாலான நிறு​வனங்​களால் நிராகரிக்​கப்​படு​கின்றன. இது பாது​காப்​பற்ற சூழலை உரு​வாக்​கு​கிறது.

எனவே, இந்த விவ​காரத்​தில் பிரதமர் மோடி நேரடி​யாக தலை​யிட்​டு, விமானப் பணிநேர வரம்பு விதி​களை கால​தாமதம் இன்றி அனைத்து நிறு​வனங்​களி​லும் உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும்.

விமான நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள தற்​காலிக பணிநேரச் சலுகைகளை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும்.

விமானிகளின் கட்​டாய வாராந்​திர ஓய்வு முறையை உறுதி செய்ய வேண்​டும். 2 விமானிகளின் மரணம் குறித்து சுதந்​திர​மான, வெளிப்​படை​யான விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விமானிகளின் பணிநேர வரம்பு விதிகள்: பிரதமருக்கு மாணிக்கம் தாகூர் எம்​.பி. கடிதம்
சென்னை ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.1,289 கோடி வருவாய் ஈட்டி சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in