பிரேமலதா எதற்காக திமுக பக்கம் வந்தார்? - கனிமொழி விளக்கம்

பிரேமலதா எதற்காக திமுக பக்கம் வந்தார்? - கனிமொழி விளக்கம்
Updated on
1 min read

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.

அவரை ஆதரித்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், நம்முடைய கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய பிரேமலதா தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்காக நான் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது.

கேப்டன் எப்படி தைரியமானவராக, எளிமையாக, மக்களோடு ஒருவராக வாழ்ந்துகாட்டினாரோ அதேபோன்றவர் பிரேமலதா. தைரியமான பெண். என்னுடைய நீண்டநாள் தோழி. இனிமேல் உங்கள் விருத்தாசலம் தொகுதி முதல்வரின் சகோதரி தொகுதி. நீங்கள் நினைத்ததை செய்து கொடுக்கும் இடத்தில் பிரேமலதா உள்ளார்.

இன்று நமது கூட்டணியில் உள்ள தலைவர்களும் வேட்பாளர்களும், மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் போது.'நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றியிருக்கிறோம்' என்ற பெருமையோடு மக்களிடம் சென்று வாக்கு கேட்கிறோம். மக்களுக்கு எதிராக ஏமாற்றுபவர்கள் எதிரணியில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று முன் தினம் மக்களவையில் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக தொலைக் காட்சியில் நம்முடைய பிரதமர் பேசப் போகிறார் என்று சொன்னார்கள். என்ன பேசி விடுவார்..?" மக்களவையிலும், சட்டப்பேரவையிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நிறுத்தி விட்டார்கள்' என்று ஒரு பொய்யைச் சொல்வார். இந்த மாதிரியான பொய்களை எல்லாம் தாங்க முடியாமல், தன்னை விட்டால் போதும் என்று சகோதரி பிரேமலதா, அங்கிருந்து வெளியேறி நம்மோடு கைகோர்த்திருக்கிறார்.

மக்களவையில் என்ன நடந்தது என்றால், மகளிர் மசோதா என்றபெயரில் மக்களவையை கூட்டி. அதில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் தொகுதி மறுசீரமைப்புக்கான முக்கிய மசோதாவையும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தினர்.

எதிர்க்கிறோம்' என்று எதிர்த்து வாக்களித்தோம். ஆனால் தொகுதி மறு சீரமைப்பை மசோதாவை ஆதரிக்கிறோம். அப்போது நாங்கள், 'மகளிர் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மோடி மசோதவை தோற்கடித்துள்ளது. இது அவர்களின் தோல்வியின் முதல் படி, அடுத்து தமிழ்நாட்டிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சந்திப்பார்கள்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையைப் பறிக்க நினைத்தவர்களுக்கு நேற்று நாங்கள் சரியான பாடத்தை புகட்டியிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி மக்களை பற்றியோ தமிழக உரிமைகளைப் பற்றியோ கவலைப்படாதவர்; அவர் முதல்வராக வேண்டும்; தான் நன்றாக இருக்க வேண்டும்; அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் பழனிசாமி தமிழகத்திலும் தோல்வியை சந்திப்பார். என்று தெரிவித்தார்.

பிரேமலதா எதற்காக திமுக பக்கம் வந்தார்? - கனிமொழி விளக்கம்
சென்னை மெட்ரோ ரயிலில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் ரூ.500 வரை அபராதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in