“காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது” - திமுக எம்எல்ஏ தளபதிக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்

“காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது” - திமுக எம்எல்ஏ தளபதிக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்
Updated on
1 min read

கரூர்: மதுரை திமுக எம்எல்ஏ கோ.தளபதி காங்கிரஸ் கட்சியையும், கரூர் எம்.பி. ஜோதிமணியையும் விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து எம்.பி. ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பது: திமுக எம்எல்ஏ கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள். நான் கரூரில் இருக்கிறேன்.

என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.

அதேபோல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ள போதும், கூட்டணி தர்மம் கருதியும், முதல்வருக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.

கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேச வேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. முதல்வரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது” - திமுக எம்எல்ஏ தளபதிக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்
“திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை” - திருமாவளவன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in