இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: சென்​னை, புறநகர் பகு​தி​களில் வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள மண்டல வாரி​யாக பொறுப்பு அமைச்​சர், மண்டல கண்​காணிப்பு அலு​வலர்​களை முதல்​வர் விஜய் நியமித்​துள்​ளார்.

இதனைத் தொடர்ந்​து, சென்னை மாநக​ராட்சி மற்​றும் ஆவடி, தாம்​பரம் மாநக​ராட்​சிகளில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வடகிழக்​குப் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து மண்டல வாரி​யாக நியமிக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு அலு​வலர்​கள், தொடர்​புடைய துறை அலு​வலர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் தலை​மைச் செயலர் மு.​சாய்​கு​மார் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

கூட்​டத்​தில், நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், சென்னை குடிநீர் வாரி​யம், நீர்​வளத்​துறை, நெடுஞ்​சாலைத் துறை, மின் துறை, வரு​வாய், பேரிடர் மேலாண்மைத் துறை, சேவைத் துறைகளின் உயர் அலு​வலர்​கள், மண்டல அளவி​லான கண்​காணிப்பு அலு​வலர்​கள், சென்னை மாநக​ராட்​சி, ஆவடி, தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர்​கள் கலந்து கொண்​டனர்.

கூட்​டத்​தில் தலை​மைச் செயலர் சாய்​கு​மார் பேசி​ய​தாவது: பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, சென்​னை, ஆவடி, தாம்​பரம் மாநக​ராட்சி உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை பணி​களை மேற்​கொள்ள வேண்​டும்.

ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும், குறிப்​பாக வேளச்​சேரி, அம்​பத்​தூர் சிட்​கோ, திரு​வெற்​றியூர், மணலி உள்​ளிட்ட மழைநீர் அதி​கம் தேங்​கும் பகு​தி​களில் உயர் அழுத்த மின்​மோட்​டார்​களை தயார் நிலை​யில் வைக்க வேண்​டும். மழைநீர்த் தேக்​கத்​தால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​காத​வாறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

மழைநீர் வடி​கால் இணைப்பு இல்​லாத பகு​தி​களில் குறிப்​பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பணி​கள் நடை​பெறும் இடங்​களி​லும், நெடுஞ்​சாலைகளி​லும் மழைநீர் வடி​கால் இணைப்பை உரு​வாக்க தீவிர நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

சென்னை உள்​ளிட்ட 3 மாநக​ராட்​சிகளில், ஒவ்​வொரு மண்​டலத்​தி​லும் உள்ள நீர்​வழிக் கால்​வாய்​கள், ஆறுகள், நீர்​நிலைகளில் நடைபெறும் தூர்​வாரும், மேம்​பாட்​டுப் பணி​களை அலு​வலர்​கள் கண்​காணித்து செப்​டம்​பர் மாத இறு​திக்​குள் பணி​களை​ முடிக்க வேண்​டும்.

வெள்ள மீட்​புக்கு தேவை​யான படகு​களும், அதை இயக்​கு​வோரும் தயார் நிலை​யில் உள்​ளதை உறுதி செய்ய வேண்​டும். வெள்ள நிவாரண மையங்​கள், சமையல் கூடங்​களை ஆய்வு செய்​து தயார் நிலை​யில் வைத்​திருக்க வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உள்ள மழைநீர் வடி​காலில் இருந்து வண்​டல்​கள் அகற்​றும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதே​போல் தாம்​பரம், ஆவடி மாநக​ராட்​சிகளில் தூர்​வாரும் பணி​களை மேற்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ அறிவுறுத்​தி​னார்.

இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
​திருப்பதி தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத நகை, பணம், வெள்ளி பொருட்​கள் பறி​முதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in