திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை

முழுமையாக அமலுக்கு வந்ததாக அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 2022 நவ.14 முதல் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ‘நிதிமன்ற உத்தரவுப்படி செல்போன் பயன்பாட்டுக்கான தடை ஜூலை முதல் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். தடையை மீறி பயன்படுத்தினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும்’ என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த முழுமையான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க, கோயில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே செல்போன் வைப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்போன் பாதுகாப்பு கட்டணமாக ரூ.5 செலுத்திவிட்டு பக்தர்கள் தங்கள் செல்போன்களை கொடுத்து சென்றனர்.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.</p></div>
டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in