“கும்பகோணத்தை முதல்வர் நிச்சயமாக தனி மாவட்டமாக அறிவிப்பார்” - எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்

எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்

எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்

Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக முதல்வர் நிச்சயமாக அறிவிப்பார் என நம்புகிறேன். நிதி நிலை சரியில்லாததே தாமதத்துக்குக் காரணமே தவிர அறிவிக்கக்கூடாது என்பது இல்லை என எம்எல்ஏவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாக்கோட்டை க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேராகும். இந்தக் கோயிலின் சித்திரை தேர் சேதமடைந்ததால், அந்த தேரில் மராமத்து பணிகள் ரூ. 70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியை பார்வையிட்ட கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர் திருப்பணி 45 நாட்களில் நிறைவு பெற்று மார்ச்சில் வெள்ளோட்டம் விடப்படும். கும்பகோணத்தில் ரூ. 5 கோடி மதிப்பில் 12 தேர்கள் செல்லும் பாதைகளில் அமைக்கப்படும் புதைவட மின்கம்பிகள் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும்.

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலான மானம்பாடி கோயிலுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, 2028-ம் ஆண்டு மாசி மகாமகத்திற்காக, பல்வேறு துறைகள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல்திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதற்கு ஒரு சில வணிகர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நகர வளர்ச்சிக்காகவும், புதிதாக இணைக்கப்படவுள்ள 14 ஊராட்சிகளின் வசதிக்காகவும் இந்த பேருந்து நிலையம் இடமாற்றம் அவசியமாகும். புதிய பேருந்து நிலையம் கும்பகோணத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் தான் அமைய உள்ளது. இதற்காக என்னுடைய மனைவி பெயரில் இருந்த நிலத்தை வழங்கி உள்ளேன். இதில் எவ்வித அரசியல் ஆதாயமும் இல்லை.

பேருந்து நிலையம் அமைப்பதற்காக முதற்கட்டமாக மண் நிரப்பப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சாக்கோட்டை - நீடாமங்கலம் செல்லும் சாலையில் ரூ.8.93 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக முதல்வர் நிச்சயமாக அறிவிப்பார் என நம்புகிறேன். நிதி நிலை சரியில்லாததே தாமதத்துக்கு காரணமே தவிர, அறிவிக்ககூடாது என்பது இல்லை. நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் நடைபெற உள்ள சட்டப்பேரவை தொடரின் போது, முதல்வரிடம் இது குறித்து வலியுறுத்த உள்ளோம். இது குறித்து நடைபெற உள்ள சட்டப்பேரவை தொடரின் போது, முதல்வர் அறிவித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை, அறிவிக்க வேண்டும் என நானும் எதிர்பார்க்கின்றேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன்</p></div>
கலீதா ஜியா மறைவு: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு; வங்கதேச அரசு அறிவிப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in