“வெளியூர்காரர்களால்தான் திருப்பரங்குன்றத்தில் பதற்றம்” - கோ.தளபதி எம்எல்ஏ குற்றச்சாட்டு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்  கிராம மக்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோ.தளபதி எம்எல்ஏ. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் கிராம மக்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோ.தளபதி எம்எல்ஏ. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றத்தில் வெளியூர்காரர்களால்தான் பதற்ற மான சூழல் உள்ளது என திமுக எம்எல்ஏ கோ.தளபதி தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கோ.தளபதி எம்எல்ஏ கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையுமில்லை, ஒற்றுமையுடன் வாழ்கிறோம்.

வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். எனக்கு 72 வயதாகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் முதலில் விளக்கு ஏற்றினர்.

பின்னர், கிராம மக்கள் எல்லோரும் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு முன் தீபம் ஏற்றினோம். வெளியூர்காரர்களால்தான் கலவரம் ஏற்படுகிறது. 2

இதனால், கோட்டைத் தெரு உள்ளிட்ட பகுதியில் போலீஸார் இரும்புத் தடுப்புகள் மூலம் தடை ஏற்படுத்தியுள்ளதால், உள்ளூர் மக்கள் சிரமப்படுகிறோம். பதற்றமான சூழல் உள்ளது.

இதற்கு தமிழக அரசுதான் முடிவு கட்ட வேண்டும், என்றார்.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் கிராம மக்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோ.தளபதி எம்எல்ஏ.

<div class="paragraphs"><p>மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்  கிராம மக்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோ.தளபதி எம்எல்ஏ. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |</p></div>
“அதிமுக ஆட்சி 2026-ல் மலர்ந்ததும் தீபம் ஏற்றப்படும்” - திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in