மு.க.ஸ்டாலின் விரைவில் பேரவைக்குள் வருவார்: கே.என்.நேரு உறுதி

மு.க.ஸ்டாலின் விரைவில் பேரவைக்குள் வருவார்: கே.என்.நேரு உறுதி
Updated on
1 min read

புதுக்கோட்டை: ​தி​முக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் விரை​வில் சட்​டப்​பேர​வைக்​குள் வரு​வார் என முன்​னாள் அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​தார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற திமுக பிர​முகர் இல்ல நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற முன்​னாள் அமைச்​சர் கே.என்​.நேரு பேசி​யது: சட்​டப்​பேர​வை​யில் ‘எங்கே உங்க அப்​பாவை காணோம்’ என்று திமுக தலை​வரை குறிப்​பிட்டு முதல்​வர் விஜய் பேசி இருக்​கிறார். மிக விரை​வாக சட்​டப்​பேர​வை​யில் அவர் பொறுப்​பேற்​பார். அது உறு​தி.

தேர்​தலுக்​குப் பிறகு திமுக​வினர் அமை​தி​யாக இருந்​தார்​கள். ஆனால், முதல்​வரின் இத்​தகைய பேச்​சுக்​குப் பிறகு இனி விட மாட்​டார்​கள் என்​றார். முன்​னாள் அமைச்​சர் எஸ்​. ரகுபதி பேசி​ய​தாவது: சட்​டப்​பேர​வையை படப்​பிடிப்​புக்​கான ஸ்டுடியோ போல நினைத்து நடந்து கொள்​கின்​றனர். முதல்​வர் விஜய் ஒவ்​வொரு நாளும் ஒரு தோற்​றத்​தில் இருக்​கிறார். இதில் ஆச்​சரியப்​படு​வதற்கு ஒன்​றுமில்​லை. ஆனால், அரசி​யலிலும் இது போன்று நடிப்​ப​தற்​காக வந்​திருக்​கிறார் என்​றால், தமிழகத்​தின் நிலை​மையை எண்ணி வருத்​தப்​படும் சூழ்​நிலை உள்​ளது என்​றார்.

மு.க.ஸ்டாலின் விரைவில் பேரவைக்குள் வருவார்: கே.என்.நேரு உறுதி
14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in