“உங்கள் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழகத்தில் ஓடாது” - மோடிக்கு ஸ்டாலின் பதில்

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: “ஒன்றிய பாஜக.அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ எனும் ‘டப்பா எஞ்சின்’ தமிழகத்தில் ஓடாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹாரைவிட தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் ‘டப்பா எஞ்சின்’ நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..

<div class="paragraphs"><p>முதல்வர் ஸ்டாலின்</p></div>
‘‘தமிழக இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் ஒப்படைத்து விட்டது திமுக அரசு’’ - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in