லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் பழிவாங்கல்: மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் பழிவாங்கல்: மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை / திருச்சி: ​முழுக்க முழுக்க அரசி​யல் காரணங்​களுக்​காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்​கை​யைத் தவெக அரசு மேற்​கொண்​டுள்​ள​தாக திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: முழுக்க முழுக்க அரசி​யல் காரணங்​களுக்​காகவே கே.என். நேரு மீதான சோதனை நடவடிக்​கை​யைத் தவெக அரசு மேற்​கொண்​டுள்​ளது. ஆட்சி அமைக்க மற்ற கட்​சிகளின் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களை ராஜி​னாமா செய்ய வைத்​து, சட்​டப்​பேரவை வளாகத்​திலேயே அவர்​களைத் தம் கட்​சி​யில் சேர்த்​ததை​யும் குதிரை பேரம் நடத்​தி​யதை​யும், அது தொடர்​பான புகார்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை முதல் தகவல் அறிக்​கை​யைக் கூட பதி​யாததை​யும் தமிழக மக்​கள் நன்​கறிவர்.

இந்​திய ஐனநாயகத்​தின் இருண்ட பக்​க​மாய் இந்​தப் போக்கு தொடரும் நிலை​யில் வழக்​கம்​போல் திசை​திருப்​பும் நடவடிக்​கை​யைக் கையில் எடுத்​துள்​ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என்​.நேரு​வும், கழக​மும் புதிய அரசின் இத்​தகைய பூச்​சாண்​டிகளுக்​கெல்​லாம் அஞ்​சிட மாட்​டோம். சட்​டத்​தின் வழி​யில் அனைத்​தை​யும் எதிர்​கொண்டு வெல்​வோம். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே திருச்​சி​யில் நேற்று தனது வீட்​டில் நடை​பெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனைக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் முன்​னாள் அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​த​தாவது: கடந்த திமுக ஆட்​சி​யில் நடை​பெற்ற ஒப்​பந்​தத்​தில் முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், அது தொடர்​பாக எனது பெயர் உள்பட 12 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக​வும், இதனால் வீட்​டில் சோதனை நடத்த வேண்​டும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வந்​தனர்.

அதன்​படி அவர்​கள் சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்​தினர். திமுக தலை​வர் ஸ்டா​லின் அறிவுறுத்தல்படி, சோதனையின்​ போது முழு ஒத்​துழைப்பு அளித்​தேன். அலு​வல​கம் சார்ந்த கோப்பு ஒன்றை மட்​டும் நகல் எடுத்​துக் கொண்​டு, என்​னிடம் கையெழுத்து பெற்​றுக்​கொண்டு சோதனையை முடித்​து​விட்டு சென்​றனர். இந்த வழக்​கில் நீதி​மன்​றம் சென்று நிரப​ராதி என நிரூபிப்​பேன். எனது வீட்​டிலும், என்​னைச் சார்ந்​தவர்​கள் வீட்​டிலும் தற்​போது 3-வது முறை​யாக சோதனை நடத்​துள்​ளது.

ஆளுங்​கட்சி குறித்து சட்​டபேர​வை​யில் அடிக்​கடி கேள்வி கேட்​ப​தால் அரசி​யல் பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக இந்த சோதனை நடத்​திருக்​கலாம். இந்த ஆட்​சி​யில் நடை​பெறும் தவறுகளை சட்​டப்​பேர​வை​யில் சுட்​டி​காட்​டு​கிறோம். காழ்ப்​புணர்ச்சி காரண​மாக இது​போன்ற நடவடிக்​கைகள் மேற்​கொள்​வது வழக்​கம்​தான். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் பழிவாங்கல்: மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு குற்றச்சாட்டு
ஆற்றை தனியாளாக சுத்தப்படுத்திய ம.பி. இளைஞர்: சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பில் இணைய அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in