திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
Updated on
1 min read

சென்னை: நான் 6 மாதம் எது​வும் கேட்​கக்கூடாது என்று நினைக்​கிறீர்​களா? இல்லை திமுகவின் பெரும் போராட்​டத்தை எதிர்​பார்க்​கிறீர்​களா? என முதல்​வர் விஜய்க்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதிவு: திறன்​மிக்க அதி​காரி​களை நியமித்​து​விட்​டேன். சிங்​கப்​பெண் படையை அமைத்​து​விட்​டேன் என்று சீறிய முதல்​வரின் காதுகளுக்கு இந்​தச் செய்​தி​களைப் பார்த்த பிற​காவது, பிஞ்​சுகளை இழந்து ஓலமிடும் பெற்​றோர்​களின் அழுகுரல் கேட்​க​வில்​லை​யா? மக்​களின் பாது​காப்பு பிரச்​சினை​களுக்கு ‘கால்​ஷீட்’ எப்​போது? சவாலும், சவடாலும் விட்​ட​வர், எப்​போது அமைதி நிலை​யில் இருந்து வெளியே வரு வார்? மக்​களின் உயிரும், குழந்​தைகளின் பாது​காப்​பும் கேள்விக்​ குறி​யாகி உள்ள நிலை​யிலும், நான் 6 மாதம் எது​வும் கேட்​கக் கூடாது என்று நினைக்​கிறீர்​களா? இல்​லை, திமுக​வின் பெரும் போராட்​டத்தை எதிர்​பார்க்​கிறீர்​களா? இவ்​வாறு ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை எதிர்க்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் வெளி​யிட்ட பதி​வில், “24 மணி நேரத்​தில் 12 பாலியல் வன்​கொடுமை​கள் நடந்​திருக்​கின்​றன. நீங்​கள் நியமனம் செய்​த​தாக சொன்ன திறன்​மிக்க அதி​காரி​கள் என்ன செய்​கிறார்​கள் முதல்​வரே? பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாகி உயி​ரிழந்த குழந்​தைகளை பெற்​றவர்​களுக்​குத் தெரி​யாமலேயே வேறு இடத்​தில் அடக்​கம் செய்​யும் அளவுக்கு நீங்கள் நடத்​தும் ஈவு இரக்​கமற்ற காட்​டாட்சி வீழ்​வது உறு​தி” என தெரி​வித்​துள்​ளார்.

நயி​னார் நாகேந்​திரன் குற்றச்சாட்டு

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்ட பதி​வில்,: “24 மணி நேரத்​தில் 12 பாலியல் வன்​கொடுமை​கள் எனில், உங்​கள் ஆட்​சி​யில் சராசரி​யாக 2 மணி நேரத்​துக்கு ஒரு பாலியல் வன்​கொடுமை நடந்து கொண்​டிருக்​கிறது.

இதையெல்​லாம் கண்டு கொள்​ளாமல் உங்​களு​டன் திரை​யில் நடித்த நடிகர், நடிகைகளை​யும், உங்​களை வைத்து திரைப்​படம் இயக்​கிய இயக்​குநர்​களை​யும் வரிசை​யாக சந்​தித்து புகைப்​படம் எடுத்​துக் கொள்​வது​தான் உங்​கள் மாற்று அரசி​ய​லா?பாதிக்​கப்​பட்​ட​வர்​களை இது​வரை நேரில் சென்று சந்​திக்​காதது ஏன்? பா​திக்​கப்​பட்​ட​வர்​கள் பனையூருக்கு வந்​தால்​ தான்​ உங்​கள்​ தரிசனம்​ கிடைக்​குமோ?” என தெரிவித்துள்ளார்.

திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா: 22-ம் தேதி தவெகவில் இணைய திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in