நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? - முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில்...
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா ? என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்: “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்”, “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதல்வரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா ?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது ?. கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?. சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது Silent Mode-ல் இருந்து வெளியே வருவார் ?.

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?. இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?. என்று மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில், மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்</em></p></div>
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in