

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரதிக்ஷா (9), வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் பிரதிக்ஷா, அவரது தம்பி அர்ஷத் (5) இருவரையும் மதுர வாயல், எம்எம்டிஏ காலனியில் உள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்திருந்தனர்.
குழந்தைகள் இருவரையும் முடி வெட்டுவதற்காக மோகனசுந்தரம் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். கோயம்பேடு மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் 3 பேரும் நிலை தடுமாறி விழுந்தனர். சிறுமி பிரதிக்ஷா மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற இருவரும் காயங்கள் ஏது மின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிந்து. லாரி ஓட்டுநர் செல்வகுமார் (28) என்பவரை கைது செய்தனர்.