‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்

‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை கூடத் தெரியாத அமைச்சர்கள் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’ என அதிமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், தான் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு’ எனத் தெரிவித்துள்ளது.

‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
‘தவெக அழிவை யாராலும் தடுக்க முடியாது’ - தற்கொலை செய்த அதிமுக நிர்வாகியின் மற்றொரு வீடியோ
‘தொகுதி எல்லை கூடத் தெரியாதது தமிழகத்தின் சாபக்கேடு’ - அமைச்சர் ஸ்ரீநாத் மீது அதிமுக விமர்சனம்
“அதிமுக அலுவலக சாவி பெருந்தன்மையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது” - விஜயபாஸ்கர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in