மாமல்லபுரத்தில் எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தொடங்கிவைத்தனர்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற எம்எல்ஏக்கள்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற எம்எல்ஏக்கள்.

Updated on: 
1 min read

மாமல்லபுரம்: எம்​எல்​ஏக்​களுக்​கான 2 நாள் பயிற்சி முகாமை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா, ஊரக வளர்ச்சி மற்​றும் நீர்​வளத் துறை அமைச்​சர் ஆனந்த் ஆகியோர் மாமல்​லபுரத்​தில் நேற்று தொடங்கி வைத்​தனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரத்​தில் உள்ள நட்​சத்​திர விடுதி​யில் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தலை​மைத்​துவ பயிற்​சித் திட்​டத்​தின் கீழ் 17-வது தமிழ்​நாடு சட்​டப்பேரவை​யின் 30 உறுப்​பினர்​களுக்​கான முதலா​வது பயிற்சி முகாம் நேற்று, இன்று (அக்.28) என 2 நாட்​களாக நடை​பெறுகிறது.

இப்​பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகரன் தலை​மையில் நேற்று நடை​பெற்​றது. மேகாலயா அரசு மற்​றும் தமிழக அரசு இணைந்து நடத்​தும் இந்த பயிற்சி முகாமை, ஊரக வளர்ச்சி மற்​றும் நீர்​வளத் துறை அமைச்​சர் ஆனந்த், பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா ஆகியோர் குத்​து​விளக்​கேற்றி தொடங்கி வைத்​தனர். இதில் எம்​எல்​ஏக்​களுக்கு சட்​டப்​பேரவை தொடர்​பாக பல்​வேறு பயிற்​சிகள் வழங்​கப்​பட உள்​ளன.

பின்​னர் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கைது நட​வடிக்​கை​யில் எந்த அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யும் இல்லை. முன்​னாள் அமைச்​சர்​கள் பலர் தொடர்ச்​சி​யாக பல்​வேறு ஊழல்​களைச் செய்​துள்​ளனர்.

ஆதா​ரங்​களின் அடிப்​படை​யிலேயே தற்​போது கைது நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. நெடுஞ்​சாலை​யில் ஒட்டு வேலைகளுக்​காக மட்​டுமே ரூ.2 ஆயிரம் கோடி டெண்​டர் போடப்​பட்டு பலருக்கு பணம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

2026 சட்​டப்​பேரவைத் தேர்​தலுக்கு முந்​தைய மாதங்​களில் அவசர, அவசர​மாக பல்​வேறு டெண்​டர்​கள் போடப்​பட்​டுள்​ளன. டெண்​டர் முறைகேடுகள் தொடர்​பாக, தொடர்ந்து ஆய்வு செய்து வரு​கிறோம். விரைவில், நெடுஞ்​சாலைத் துறை​யில் வெள்ளை அறிக்கை வெளி​யிடப்​படும்.

இது மட்​டுமல்ல, பல துறைகளி​லும் அமைச்​சர்​கள் பல்​வேறு வழிகளில் முறைகேடுகளை செய்​துள்​ளனர். விரைவில் ஒவ்​வொரு துறை​யாக ஊழல் குறித்​தான ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு, துறைவாரியாக வெள்​ளை அறிக்கை வெளி​யிட நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற 2 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற எம்எல்ஏக்கள்.</p></div>
தேனி சிறை சம்பவத்தில் நடவடிக்கையும், தேடுதல் வேட்டையும்: சிறைத் துறை டிஜிபி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in