முழு கடன் தள்ளுபடி கோரிக்கை: விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

முழு கடன் தள்ளுபடி கோரிக்கை: விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

சென்னை: விவ​சாய கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி போராடி வரும் விவ​சா​யிகள் சங்க பிர​தி​நி​தி​களு​டன் அமைச்சர்கள் நேற்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

விவ​சா​யிகளின் கோரிக்​கைகளை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​வ​தாக அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர். பயிர்க்​கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​யக் கோரி விவ​சா​யிகள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜூ​னா, கே.ஏ.செங்​கோட்​டையன், சி.டி.நிர்​மல் குமார், ராஜ்மோகன், வினோத், வெங்​கடரமணன், காந்​தி​ராஜ் ஆகியோர் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் 25 விவ​சா​யிகள் சங்​கங்​களை சேர்ந்த முன்​னணி தலை​வர்​களு​டன் நேற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் விவ​சாய சங்​கத் தலை​வர்​கள் பி.ஆர்​.​பாண்​டியன், பி.அய்​யாகண்​ணு, சாமி நடராஜன், பி.எஸ்​.​மாசிலாமணி, ரவீந்​திரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தவெக அரசு தனது தேர்​தல் வாக்​குறு​தி​யின் அடிப்​படை​யில் சிறு, குறு விவ​சா​யிகளுக்கு 100 சதவீதம், பெரு விவ​சா​யிகளுக்கு 50 சதவீதம் கடனை நிபந்​தனை​யின்றி தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

வட்டி தவணை முடி​யும் தரு​வா​யில் திரும்​பிச் செலுத்​திய விவ​சா​யிகளுக்​கும் தள்​ளு​படி அறி​விப்​பில் பயன்​பெற அனு​ம​திக்க வேண்​டும்.

குடும்ப அட்​டைக்கு ஒரு​வர் என்ற பாகு​பாடு கூடாது. ஏற்​கெனவே கடந்த கால ஆட்​சி​யில் தள்​ளு​படி செய்த வழி​முறையை பின்​பற்றி தள்​ளு​படி அறி​விப்பை வெளி​யிட வேண்​டும். நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.4500 விலை நிர்​ண​யம் செய்து அறி​விப்பு வெளி​யிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை விவ​சா​யிகள் சங்க பிர​தி​நி​தி​கள் முன்​வைத்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்பு குழு தலை​வர் பி.ஆர்​.​ பாண்​டியன் கூறும்​போது, “விவ​சா​யிகளின் கோரிக்​கைகள் அனைத்​தும் முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​படும். உரிய அறி​விப்​பு​கள் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில் வெளி​யாகும் என அமைச்​சர்​கள் உறுதி அளித்​துள்​ளனர்” என்​றார்.

தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்க தலை​வர் அய்​யாகண்ணு கூறும்​போது, “8 அமைச்​சர்​கள் பங்​கேற்று விவ​சா​யிகளின் குறையை கேட்​பது இதுவே முதல்​முறை. எங்​கள் கோரிக்​கள் மீது நல்ல முடிவு ஒரு வாரத்​தில் வரும்” என்​றார்.

கூட்​டத்​தில் நிதித்​துறை செயலர் சித்​திக், கூட்​டுறவுத் துறை செயலர் பி.அ​மு​தா, வேளாண் துறை செயலர் பொ.சங்​கர் உள்​ளிட்ட அதி​காரி​கள் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் தளி ராமச்​சந்​திரன், கீழ்​வேளூர் லதா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதற்​கான ஏற்​பாடு​களை திருத்​துறைப்​பூண்டி தொகுதி எம்​எல்​ஏ கே.​மாரி​முத்​து செய்​திருந்​தார்​.

முழு கடன் தள்ளுபடி கோரிக்கை: விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
ஜனநாயகன் பட ‘குட் டச், பேட் டச்’ காட்சியை பார்த்த சிறுமி தந்தையிடம் தகவல்: தாய் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் ‘போக்சோ’வில் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in