திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு

திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு
Updated on: 
1 min read

திருச்சி: புதுக்கோட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் விஜய் இன்று காலை 10:15 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு அவரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ரமேஷ், பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயல், மாநகராட்சி ஆணையர் பொன்மணி, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா உள்ளிட்டோர் மலர் கொத்து அளித்து சிறப்பாக வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து முதல்வர் விஜய் வேனில் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்றார். புதுக்கோட்டை செல்லும் வழியில் முதல்வருக்கு தவெக கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சி வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு
புதுக்கோட்டையில் முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இடமாற்றம்

X