முதல்வர் விஜய்யை வழியனுப்ப செல்லாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்: மதுரை தவெகவில் என்ன நடக்கிறது?

கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு
மதுரை தெப்பக்குளம் பகுதியில் முதல்வரை வரவேற்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் முதல்வரை வரவேற்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

Updated on: 
2 min read

மதுரை: மதுரை வந்த முதல்வரை வரவேற்க காலை விமான நிலையத்துக்குச் சென்ற அமைச்சர்கள், மாலையில் அவரை வழியனுப்பச் செல்லாததால், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார். பின்னர் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் தொடங்கி வைத்து, மாலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து சென்னை செல்ல விமான நிலையம் புறப்பட்டுச் சென்றபோது, அவருடன் அமைச்சர்கள் அருண்ராஜ், நிர்மல்குமார், விஸ்வநாதன், ரமேஷ், மதுரை மாவட்ட தவெக எம்எல்ஏ-க்கள் யாரும் செல்ல வில்லை.

ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், தென்மண்டல ஐஜி, மாநகர காவல் ஆணையர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மட்டுமே விமான நிலையம் சென்று முதல்வர் விஜய்யை வழியனுப்பி வைத்தனர்.

காலையில் முதல்வரை வரவேற்கச் சென்ற அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மாலையில் ஏன் வழியனுப்பச் செல்லவில்லை என்ற குழப்பமும், தகவலும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டத்தில் வேகமாகப் பரவியது.

முதல்வர் அதிருப்தியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் தன்னை வழியனுப்ப வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியாமல் நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்து அக்கட்சியினர், அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: முதல்வர் விஜய்யை வழியனுப்ப கான்வாயில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உடன் வந்தால் தேவையில்லாமல் வாகனங்கள் அணிவகுப்பு, நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, தன்னுடன் அவர்களை வரவேண்டாம் என்று கூறிவிட்டாராம். மதுரை சுற்றுப்பயணம் முதல்வருக்கு மிகுந்த மனநிறைவையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நடந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்ட தொடக்க விழா ஏற்பாடுகள் முதல்வரை வெகுவாகக் கவர்ந்தன. அதற்

காக சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர்களை முதல்வர் பாராட்டியுள்ளார்.

அங்கு தங்க மோதிரம் பெற்ற தாய்மார்கள் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்தது முதல்வருக்கு நெகிழ்ச் சியை ஏற்படுத்தியதாக அரசுத் தரப்பில் தகவல்கள் வந்துள்ளன.

வழிநெடுக தன்னை வரவேற்கக் காத்திருந்த மக்கள், கட்சியினர் கூட்டம் முதல்வரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அந்த உற்சாகத்திலேயே ஆங்காங்கே வேனை விட்டு கீழே இறங்கி செல்ஃபி எடுப்பது, மக்களிடம் உரையாடுவது என மதுரை நிகழ்ச்சிகள் நடந்து முடியும் வரை முதல்வர் உற்சாகமாகவே காணப்பட்டார், என்றனர்.

‘பிளக்ஸ் பேனர்’ கூடாது என முதல்வர் உத்தரவிட்டாரா?

முதல்வர் விஜய்யை வரவேற்க மதுரை மாநகர் முழுவதும் ஆங்காங்கே முக்கியச் சந்திப்புகள், சாலைகளில் தவெக எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

முதல்வர் விஜய், தன்னை வரவேற்க பிளக்ஸ் பேனர்கள் எதுவும் வைக்கக் கூடாது, போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவின்பேரில், இரவோடு இரவாக அந்த பேனர்கள் அகற்றப்பட்டதாகவும், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த தவெக எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள், இந்தத்தகவலை கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

உண்மையைச் சொல்கிறார்களா? அரசியல் செய்கின்றனரா? என்று கேட்டபோது, முதல்வர்தான் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று கூறியதாகச் சொல்லப்பட்டதால் எம்எல்ஏ-க்கள் தரப்பினர் அமைதியாகினர்.

<div class="paragraphs"><p>மதுரை தெப்பக்குளம் பகுதியில் முதல்வரை வரவேற்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர்களை கிழித்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். </p></div>
சீற்றக் கட்சி தலைகளின் கவலை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in