தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வெவ்வேறு மடிக்கணினிகள்: அமைச்சர் பி.விஸ்வநாதன் தகவல்

தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வெவ்வேறு மடிக்கணினிகள்: அமைச்சர் பி.விஸ்வநாதன் தகவல்
Updated on: 
1 min read

சென்னை: தேவை மற்​றும் பயன்​பாட்​டுக்கு ஏற்ப கலை அறி​வியல் கல்​லூரி மாணவர்​களுக்​கும், பொறி​யியல் கல்​லூரி மாணவர்​களுக்​கும் வெவ்​வேறு மடிக்​கணி​னிகள் வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் பி.விஸ்வநாதன் கூறினார்.

தேசிய கல்வி நாள், தேசிய உருது நாள் விழா சென்னை பல்​கலைக்​கழகத்​தில் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் உயர்​கல்வி அமைச்​சர் விஸ்வநாதன் பேசிய​தாவது: கல்​லூரி மாணவர்​களின் நீண்ட நாள் கோரிக்​கையை நிறைவேற்​றும் வகை​யில், அவர்களுக்கு அதிநவீன மடிக்​கணி​னிகளை மிக விரைவில் வழங்​கு​வதற்​காக தமிழக முதல்​வர் விஜய் ரூ. 2,000 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளார்.

அதற்​கான அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டுவிட்​டது. மாணவர்​களின் படிப்​புத் துறைக்கு ஏற்ப அதிநவீனத் தொழில்​நுட்ப வசதி​களு​டன் வெவ்​வேறு கட்​டமைப்​புத் திறன்​களைக் (Configuration) கொண்ட மடிக்கணினிகள் வடிவ​மைக்​கப்​பட்டு வழங்​கப்​பட உள்​ளன.

அரசு கலை, அறி​வியல் கல்​லூரி மாணவர்​களின் தேவை​களுக்கு ஒரு வித​மான கட்​டமைப்​பும், பொறி​யியல் மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​குத் தகுந்​தவாறு மேம்​பட்ட மற்​றொரு வித​மான கட்​டமைப்​பும் கொண்ட மடிக்​கணி​னிகளாக வழங்​கப்​படும்.

இவ்​வாறு மாணவர்​களுக்கு இடையே வெவ்​வேறு வகை​யான மடிக்​கணி​னிகள் வழங்​கப்​படுவது எந்​தவொரு பாகுபாடும் காட்​டுவதற்​காக அல்ல. மாறாக, பொறி​யியல் படிப்​புக்​கான சாஃப்ட்​வேர் தேவை​களும், கலை மற்​றும் அறி​வியல் படிப்​புக்​கான சாஃப்ட்​வேர் தேவை​களும் மாறு​படும். இவ்​வாறு அமைச்​சர் விஸ்வநாதன் கூறினார்.

உருது கவிஞர்​கள் மற்​றும் உருது பள்​ளி​களில் 30 ஆண்​டுகள் பணி​யாற்​றிய ஆசி​ரியர்​களுக்கு அமைச்​சர் நினைவுப்​பரிசு வழங்​கினார்.

இந்த விழா​வில் தமிழ்​நாடு மாநில உருது கழகத் துணைத் தலை​வர் முகமது நயீமூர் ரகுமான், தமிழ்​நாடு வக்பு வாரிய தலை​வர் கே.நவாஸ் கனி, முன்​னாள் எம்​எல்ஏ கே.எம்.அபுபக்​கர், சென்னை பல்​கலைக்​கழகத் துணை வேந்​தர் ஒருங்​கிணைப்​புக் குழு உறுப்​பினர் பேராசி​ரியர் எஸ்.ஆம்​ஸ்ட்​ராங், பதிவாளர் ரீட்டா ஜான் மற்​றும் உருது ஆசி​ரியர்​கள் மாணவ, மாணவி​கள் கலந்​து​கொண்​டனர்.

தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப மாணவர்களுக்கு வெவ்வேறு மடிக்கணினிகள்: அமைச்சர் பி.விஸ்வநாதன் தகவல்
சம்பா நெற்பயிர் காப்பீட்டு காலவரம்பு டிச.1 வரை நீட்டிப்பு: அமைச்சர் ஆர்.வினோத் தகவல்

X