வேளாண் பட்ஜெட் குறித்து அமைச்சர் ஆலோசனை

வேளாண் துறை அமைச்சர் வினோத்

வேளாண் துறை அமைச்சர் வினோத்

Updated on
1 min read

சென்னை: வேளாண் துறை செயலர் பொ.சங்​கர் மற்​றும் வேளாண் துறை இயக்​குநர் முரளிதரன், தோட்​டக் கலைத் துறை இயக்​குநர் விஜ​யா​ராணி உள்​ளிட்ட அதி​காரி​களு​டன் பட்​ஜெட் அம்​சங்​கள் தொடர்​பாக அமைச்​சர் ஆர்​.​வினோத் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

ஏற்​கெனவே வேளாண் பட்​ஜெட் தயா​ரிப்பு தொடர்​பாக விவ​சா​யிகள், வேளாண் வல்​லுநர்​கள் மற்​றும் பல்​வேறு தரப்​பினருடன் ஆலோ​சனை​கள் நடத்​தி, கருத்​துகள் கேட்​கப்​பட்​டன. அதில் கரும்​பு, நெல்​லுக்கு ஆதார விலையை உயர்த்த வேண்​டும், குளிர்ப்​பதன கிடங்​கு​கள் அமைக்க வேண்​டும். இனி ஒரு பிடி நெல் கூட மழை​யில் நனை​யாத​படி நெல் சேமிப்பு கிடங்​கு​கள் அமைக்க வேண்​டும். பயிர்க் கடனை முழு​மை​யாகத் தள்​ளு​படி செய்ய வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​கள் வைக்​கப்​பட்​டிருந்​தன.

அமைச்​சர் வினோத் தலை​மையி​லான ஆலோ​சனை கூட்​டத்​தில், தமி​ழ​கத்​தில் பனை மரம் பாது​காக்​கப்​பட்ட மரமாக அறி​வித்​தல், சொந்த விவ​சாய நிலம் வைத்​துள்ள ஒவ்​வொரு விவ​சாயி குடும்​பத்​துக்​கும் விதைப்பு கால நிதி ரூ.15 ஆயிரம் 2 தவணை​யாக வழங்​குதல், குத்​தகை விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழி​லா​ளர்​களுக்கு உழவர் உரிமை அட்டை வழங்​கு​வது, ஆண்​டு​தோறும் ரூ.10 ஆயிரம் நேரடி வங்கி கணக்​கில் உதவி தொகை​யாக வழங்​கும் திட்​டத்தை செயல்​படுத்​து​வது, நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்​னுக்கு ரூ.4,500 ஆதார விலையை நிர்​ண​யம் செய்​தல், சந்​தை​யில் சரிவு ஏற்​படும் போது அதை அரசு ஏற்​பது உள்​ளிட்​டவை குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக தகவல்​ வெளி​யாகி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>வேளாண் துறை அமைச்சர் வினோத்</p></div>
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in