நொச்சிக்குப்பம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்: அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சுவார்த்தை

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், மீனவ பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  | படம்: எல்.சீனிவாசன் |

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், மீனவ பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  | படம்: எல்.சீனிவாசன் |

Updated on
1 min read

சென்னை: மயி​லாப்​பூர் நொச்​சிக்​குப்​பத்​தில் மீனவர்​கள் நேற்று கவன ஈர்ப்பு உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் அமைச்​சர் வெங்​கட்​ரமணன் பேச்​சு​வார்த்தை நடத்​தினார்.

நொச்​சிக்​குப்​பத்தைச் சேர்ந்த மீனவ மக்​கள், பல தலை​முறை​களாக மீன்​பிடித் தொழில், மீன் வியா​பாரம் செய்து வரு​கின்​றனர். இவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை பாதிக்​கும் வகை​யில், மீன்​பிடி தொழில் செய்​யும் இடங்​களில் சுற்​றுலாத் திட்​டங்​களை கொண்டு வர முயல்​வ​தாக மீனவர்​கள் குற்​றம்சாட்​டி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், சென்னை நொச்​சிக்​குப்​பம் லூப் சாலை​யில், பாரம்​பரிய மீன்​பிடி, மீன் வியா​பாரத்தை பாது​காக்​கக் கோரி​யும், கடற்​கரை சுற்​றுலாத் திட்​டங்​களை கைவிட வலி​யுறுத்​தி​யும் முதல்​வரின் கவனத்தை ஈர்க்​கும் வகை​யில், மீனவர்​கள் நேற்று உண்​ணாவிரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இப்​போ​ராட்​டத்​தில், 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் சாலை​யோரம் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது அவர்​கள் கூறுகை​யில், “பு​திய மீன் விற்​பனை அங்​காடி அரசால் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டது.

அது எங்​களுக்கு வேண்​டாம். காலம் கால​மாக லூப் சாலை​யில், சாலை ஓரமாக நாங்​கள் வியா​பாரம் செய்​தோம். அதுவே எங்​களுக்கு போதும். புதிய மீன் அங்​காடியை எங்​களுக்கு சமு​தாயக் கூட​மாக அமைத்​துத் தர வேண்​டும்” என்​றனர்.

தமிழக பாஜக​வின் முன்​னாள் மாநிலத் தலை​வரும், மயி​லாப்​பூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யின் பாஜக முன்​னாள் வேட்​பாள​ரு​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் நேரில் சென்​று, மீனவர்​களை சந்​தித்து ஆதர​வைத் தெரி​வித்​தார்.

உணவுப் பொருள் வழங்​கல் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை அமைச்​சரும், மயி​லாப்​பூர் தவெக சட்​டப்​பேரவை உறுப்​பினரு​மான வெங்​கட்​ரமணன், மீனவ அமைப்பு பிரி​தி​நி​தி​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது சில பெண்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்​பட்​டது.

பின்​னர் அவர் கூறிய​தாவது: அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யுடன் சிலர் பிரச்​சினை செய்​கின்​றனர். வருங்​காலங்​களில், மயி​லாப்​பூர் நொச்சிக்குப்பம் லூப் சாலை​யில் கடைகள் அமைக்க தெரி​வித்​துள்​ளோம். மீனவப் பெண்​களின் பாது​காப்பு மற்​றும் மேம்​பாட்​டுக்​காக கடைகளை அமைத்​து, ஒதுக்​கிக் கொடுத்​துள்​ளோம்.

பாது​காப்பை விரும்​பும் மக்​கள் நவீன அங்​காடிக்கு வரலாம். யாரை​யும் கட்​டாயப்​படுத்​த​வில்​லை. வருங்​காலங்​களில் சமூக கூடங்​கள் அமைத்துக் கொடுப்​போம். ஒவ்​வொரு மீனவ சகோ​தரிக்​கும் தேவை​யான, வாழ்​வா​தா​ரத்​தை அமைத்​துக்​ கொடுப்​போம்​. 150 பேர்​ கடை கேட்​டு மனு கொடுத்​துள்​ளனர்​. சம்​பந்​தப்​பட்​ட துறை மற்​றும்​ ​மாநக​ராட்​சி உதவி​யுடன்​ அவர்​களுக்​கு கடை ஒதுக்​கிக்​ கொடுப்​போம்​ என்​று அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் வெங்கட்ரமணனிடம், மீனவ பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.&nbsp; | படம்: எல்.சீனிவாசன் |</p></div>
அழகிரி மகள் கயல்விழி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in