“திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும் பிழைப்புவாதி சீமான்” - அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்

“திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும் பிழைப்புவாதி சீமான்” - அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்
Updated on: 
2 min read

மதுரை: “திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும் பிழைப்புவாதி சீமான். அவரை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்” என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக நீதித் துறை சார்பில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ கல்லாணை முன்னிலை வகித்தார். இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி பங்கேற்று இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னி அரசு கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளாகியும் பூர்வகுடி மக்கள் மனைப் பட்டாவுக்கு கையேந்தி நிற்பதை அவலமாக கருதுகிறோம். அதனை தீர்க்கும் அரசாக தவெக அரசு அமைந்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எல்லா ஆட்சிக் காலத்திலும் இருப்பதுதான். எதிர்க்கட்சிகள் போகிற போக்கில் அவதூறுகளை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலை மையப்படுத்தி முதல்வர் செயல்பாடுகள் இருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இடைத்தேர்தலை தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என முதல்வர் தேடிச் செல்கிறார். நூற்றாண்டு கால சாதிய கொடுமைகளையும், சனாதன கட்டமைப்பையும் பாஜக பாதுகாத்து வருகிறது.

வந்தே மாதரம் முதலில் பாட வேண்டும் என்று பாஜக அரசு சொன்னபோது தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும் என இந்தியாவில் பல மாநிலங்கள் தயங்கியபோது முதலில் தீர்மானம் நிறைவேற்றியது தவெக அரசு.

<div class="paragraphs"><p>மதுரை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்த விழாவில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் வன்னி  அரசு வழங்கினார் . </p></div>

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்த விழாவில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் வன்னி அரசு வழங்கினார் .

படம்: நா.தங்கரத்தினம்

வக்பு வாரிய திருத்த சட்டம் போல், கிறிஸ்தவ மக்களின் சொத்துகளை கொள்ளையடிக்கும் வகையில் எப்சிஆர்ஏ சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது தவெக அரசுதான் முதலில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

பாஜகவோடு தவெக இணைந்து செயல்படுவதாக வைத்துக்கொண்டால், பாஜக கொண்டுவந்த சட்டங்களை தவெக எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்திருக்காது. பாஜகவோடு இணைந்து செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது அவதூறு.

கடந்த காலங்களில் இண்டியா கூட்டணியில் இருந்த திமுக எஸ்ஐஆர் போராட்டத்தில் பங்கேற்றது. தற்போது நடந்த எஸ்ஐஆர் போராட்டத்தில் திமுக பங்கேற்கவும் இல்லை, தனித்தும் போராடவில்லை. அப்படி போராடவில்லை என்பதற்காக பாஜகவோடு இணைந்து செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்ட முடியுமா?

அதிமுகவை பொதுச் செயலாளர் பழனிசாமி பூஜ்ஜியமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சி கரைந்து வருகிறது. மாநில உரிமைகளை பேசும் கட்சி வலிமை குன்றக் கூடாது, அவர் அதிமுகவை பூஜ்ஜியமாக்காமல் பிளஸ் ஆக்க வேண்டும்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளர் என சீமானே சொல்லிக் கொள்கிறார். நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக் கொள்வதுபோல், அவரை யாரும் முன்மொழியவில்லை, ஆனால் அவர் பொது வேட்பாளராக ஆசைப்படுகிறார்.

திராவிட கருத்தியலுக்கு எதிராக பார்ப்பன கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சொன்னார். தற்போது அந்த கடப்பாரையை தூக்கிப் போட்டுவிட்டு திராவிட கடப்பாரை எடுத்து தமிழ்த் தேசிய கோட்டையை இடிப்பதற்கு கிளம்பிவிட்டார்.

சீமானைப் போன்ற ஒரு பிழைப்புவாதி, சந்தர்ப்பவாதியைப் போன்று இம்மாதிரி அரசியல் செய்வோர் யாரும் இருக்க முடியாது. இலங்கையில் தொடர்ந்து யுத்தம் நடந்தபோது அவர் கட்சி ஆரம்பித்தார். இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியோடு திமுக, விசிக உள்ளது என எங்களை எதிர்த்து கட்சி ஆரம்பித்தார்.

இதுமாதிரி திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது எம்எல்ஏ பதவிக்காக கொண்ட கொள்கையை விட்டுச் செல்வது பிழைப்புவாதம் தானே. ஆனால் தமிழ் தேசியக் கொள்கையில் விசிக நிலைத்திருப்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் புரிந்துகொண்டால் சரி.

முழுமையாக திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும், தட்டு ஏந்தி நிற்கக் கூடியவர் சீமான். அவர் சொல்லும் முழக்கம் வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம் என்றுதான் சொல்வார்.

தற்போது திராவிடத்திடம் மண்டியிட்டுக் கிடக்கும் பிழைப்புவாதிதான் சீமான். அவரை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாரகள். அதுதான் அம்பாசமுத்திரம் சொல்லும் செய்தி” என்று அவர் கூறினார்.

“திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும் பிழைப்புவாதி சீமான்” - அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்
“அன்று 248 கி.மீ, இன்று 1,200 கி.மீ... 12 ஆண்டுகளில் மெட்ரோ கட்டமைப்பு மேம்பாடு” - பிரதமர் மோடி பெருமிதம்

X