“தவெகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகரிப்பதால் திமுகவுக்கு பதற்றம்” - அமைச்சர் ஷாஜகான்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

மேலப்பாளையம்: “தவெகவுக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு அதிகரித்து வருவது திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

மேலப்பாளையம் வாபர் பள்ளிவாசலில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் தர்கா பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், வக்பு வாரியத் தலைவர் நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியது: “உலமாக்கள் நல வாரியத்தில் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 950 உலமாக்களுக்கு சுமார் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் அதற்கான பணி நடைபெறுகிறது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்டகால சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தல் பிரச்சாரங்களில் பெண்களை அவதூறாக, தரக்குறைவாக பேசுவதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தவிர்த்து, ஆரோக்கியமான அரசியலுக்கு முன்வர வேண்டும்.

திமுகவுக்கு முக்கியமான வாக்கு வங்கியாக சிறுபான்மை சமுதாய வாக்குகள் இருந்தன. முந்தைய அரசுகளை விட, சிறுபான்மையினருக்கு இந்த அரசு அதிக நன்மைகளைச் செய்து வருகிறது. இதை நாங்கள் சிறுபான்மையின மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

தவெகவுக்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதுவே திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்காலத்தில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“எப்ஐஆர் முதல் உச்ச நீதிமன்றம் வரை 3 ஆண்டுகளில் வழக்குகளுக்கு தீர்வு” - அமித் ஷா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in