இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும்: அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

Updated on
1 min read

சென்னை: இந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில் பழநி முரு​கன் கோயில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் இந்​து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை, சுற்​றுச்​சூழல், காலநிலை மாற்​றம் மற்​றும் வனத்​துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதத்​தில் அதி​முக உறுப்​பினர் ரவி மனோகரன் (பழநி தொகு​தி) பேசும்​போது, “பழநி முரு​கன் கோயிலுக்கு ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தரு​கிறார்​கள்.

அங்கு கோயில் அன்​ன​தான திட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு பணி​களில் ஒப்​பந்த பணி​யாளர்​கள்​தான் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்​தான் சம்​பள​மாக கொடுக்​கப்​படு​கிறது. அங்கு நிரந்தர பணி​யாளர்​களை நியமிக்க வேண்​டும்” என்று வேண்​டு​கோள் விடுத்​தார்.

அதற்கு இந்​துசமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் பதில் அளிக்​கு்ம் ​போது, “பழநி முரு​கன் கோயி​லில் அன்​ன​தான திட்ட பணி, கோயில் உள்​கட்​டமைப்பு வசதி​கள் போன்​றவற்றை அண்​மை​யில் ஆய்வு செய்​தேன். அப்​போது உறுப்​பினரும் என்​னோடு வந்​திருந்​தார். தமிழ்க்​கட​வுள் முரு​கன். பழநி முரு​கன் கோயிலை இ்ந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்த வேண்​டும் என்று முதல்​வர் கூறி​யுள்​ளார். அதன்​படி இந்​தி​யாவே திரும்பி பார்க்​கும் வண்​ணம் இக்​கோ​யில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்​தப்​படும். அனைத்து வசதி​களு​டன் கோயில் மேம்​படுத்​தப்​படும்” என்​றார்.

அள்ளிக் கொடுத்த பழநி முரு​கன்: முன்​ன​தாக, உறுப்​பினர் ரவி மனோகரன் பேசுகை​யில், “பழநி முரு​கன் கோயிலுக்கு அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் அதி​கம் சென்று வரு​கிறார். அவருக்கு பழநி முரு​கன் கேட்​டதை​யும் கொடுத்​தார். அவர் கேட்​காததை​யு்ம் அள்ளி அள்ளி கொடுத்​துள்​ளார். எனவே, பழநி குறித்து அமைச்​சர் செங்​கோட்​டையன்​தான் அதி​கம் பேச வேண்​டும்” என்​றார்.

அதற்கு அமைச்​சர் செங்​கோட்​டையன் பதில் அளிக்​கை​யில், “பழநி முரு​கன் நான் கேட்​டதை​யும், கேட்​காததை​யும் அள்ளி அள்ளி கொடுத்​துள்​ளார் என உறுப்​பினர் இங்கே குறிப்​பிட்​டார். பழநி முரு​க​னைப் போல் தமிழக முதல்​வர் விஜய்​யும் எனக்கு அள்ளி அள்ளி கொடுத்​துள்​ளார். என்னை இங்கே அமர​வைத்​துள்​ளார். அவருக்​கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்​” என்​றார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ரமேஷ் </p></div>
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in