போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் ஏற்​பட்ட சட்​டம்​-ஒழுங்கு சீர்​கேட்டை சரி செய்​ய​வும், போதைப்பொருள் நடமாட்​டத்​தைத் தடுக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன், அமெரிக்​கா​வில் நடந்த உலகத் தமிழ் அமைப்​பு​களின் ஆண்டு விழா​வில் பங்​கேற்​று​விட்​டு, நேற்று சென்னை திரும்​பி​னார்.

விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் பள்​ளி​கள், அரசு நிறு​வனங்​களில் அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​கள் ஆய்வு என்​பது காலம் கால​மாக நடந்து வரு​கிறது. ஆய்வு மேற்​கொண்​ட​தில் அமைச்​சர் (கீர்த்​த​னா) மரபு மீற​வில்​லை.

அமைச்​சர் தனது ஆய்வை வீடியோ​வாக எடுக்​க​வில்​லை. மற்ற ஊடகங்​கள் எடுத்த காணொலி தான் வெளி​யாகி, சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. அமைச்​சர் தமிழ் வழிக் கல்​வி​யில் படித்​து, ஆங்​கிலத் திறமை பெற்றவ​ராக உள்​ளார்.

மரபுப்​படி அமைச்​சர் ஆய்வு மேற்​கொண்​டதை தவறாக எடுத்​துக்​கொள்​ளக் கூடாது.`கடல் நீரை குடிநீர் ஆக்​கும் திட்​டம் 50 நாட்​கள் ஆட்​சி​யில் நடக்​க​வில்​லை. எங்​களு​டைய 5 ஆண்​டுக்​கால ஆட்​சி​யில் உரு​வாக்​கப்​பட்​டது' என்று கூறுகின்​றனர்.

அதே​போல் தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கேடு, 50 நாட்​களில் உரு​வானது அல்ல; 5 ஆண்​டு​களில் ஏற்​பட்​டது தான். எங்கும் இருக்​கும் போதைப்​பொருள் நடமாட்​டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழகத்​தில் 3-ம் வகுப்பு வரை பாடத்​திட்​டங்​கள் மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகளை, நண்​பர்​களாக, தோழர்​களாக பார்க்​கக்​கூடிய கட்சி தவெக. இது​தான் ஜனநாயகம். கூட்​டணி கட்​சிகளை தங்​களுக்கு கீழாக பார்க்​கும், எந்​த​வித நெருக்​கடி​யும், கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு கொடுக்க மாட்​டோம்.

திரு​மாவளவனின் பேச்சை ஜனநாயகத்​தின் வெளிப்​பா​டாக பார்க்​கிறோம். தனி​யார் பள்​ளி​கள் ஒவ்​வொரு சான்​றிதழுக்​கும் ரூ.25 லட்​சம், ரூ.40 லட்​சம் பணம் கொடுத்து வந்த ஊழலை தடுத்து நிறுத்​தி​யிருக்​கிறோம்.

பல்​லா​யிரம் கோடி ரூபாய் ஊழல் தடுக்​கப்​பட்​டுள்​ளது. அரசுப் பள்​ளிகள்​தான் எனது கண்​கள். நான் போட்டமுதல் கையெழுத்​து, அரசு பள்​ளி​களில் மாணவி​களின் கழிப்​பறை​கள் மூடக்​கூடிய தாழ்ப்​பாள்​களு​டன் இருக்க வேண்​டும் என்​பது​தான். அரசு பள்​ளி​யின் முன்​னேற்​றத்​துக்​காக பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்​துக் கொண்​டிருக்​கிறோம் என்று ​ தெரி​வித்​தார்​.

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
ஆர்.கே.நகர், திருவெறும்பூர் உள்ளிட்ட தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in