‘ஜெம்’ கிரானைட் வீரமணி விவகாரத்தில் கம்யூ. கண்டித்ததா? - அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: “கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட மிக கொடூரமான ‘ஜெம்’ கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா, இல்லையா? இது குறித்து அவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக - கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியாக இருக்கிறது, இது ஜனநாயக கூட்டணி. அதில் ஜனநாயகம் என்னவென்றால், எங்கள் மீது பெ.சண்முகம் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் வைக்கலாம். அது அவர்களின் உரிமை.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக, முதல்வருக்குத் தெரியாமல் அரசாணை வருகிறதா என்று அவர் கேட்பதன் நோக்கம், 'தலைமைச் செயலகம் வேண்டும் என்று சேர்ந்துதானே முடிவெடுத்தீர்கள்?' என்று பெ.சண்முகம் கேட்கிறார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக, தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அங்குள்ள மக்களும் மீனவர்களும் கருத்து தெரிவித்து வருவதால், அவர்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யும் உரிமையும் முதல்வருக்கு இருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

கடற்கரையில் பேனா சிலையை வைத்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் ஆட்சியாளர்கள் நாங்கள் இல்லை. அனைவரின் கருத்துகளுக்கு செவிகொடுக்கும் ஆட்சியாளர்கள். இந்த முடிவல்ல, எந்த முடிவாக இருந்தாலும் சரி.

கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட மிக கொடூரமான ‘ஜெம்’ கிரானைட் வீரமணி பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கு விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா, இல்லையா? இதை நான் கோபமாக கேட்கவில்லை. இது குறித்து அவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன் </p></div>
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: விஜய்க்கு முன்னுரிமை அளித்து காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in