“செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்” - அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

Updated on
1 min read

சென்னை: “செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்​னிலை​யில், தவெக​வில் இணைந்​தார். இந்நிலையில், அமைச்சர் ரகுபதியிடம், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், “என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம்.

அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர். தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்தான் செங்கோட்டையன். அந்த அசைன்மென்ட்டில் தான், அவர் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து.

கட்சியை விட்டு ஒரு தலைவர் வரும்போது, மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான். செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தபோது, அவரை அமைச்சர் சேகர் பாபு நட்பு ரீதியில் கட்சிக்கு (திமுக) அழைத்திருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான் வரவில்லை” என்று கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ரகுபதி</p></div>
“செங்கோட்டையன் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன?” - மதுரையில் பழனிசாமி காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in