“திமுக ஆட்சியாக இருந்தால் மெத்தம்பெட்டமைனை கோலப்பொடி என மறைத்திருப்பர்” - அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

Updated on: 
2 min read

மதுரை: ‘‘திமுக ஆட்சியாக இருந்திருந்தால் மெத்தம்பெட்டமைனையே கோலப்பொடி எனக் கூறி மூடி உண்மை வெளிவராமல் மறைத்திருப்பார்கள்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

மதுரையில் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கவிழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தின் கூடுதல் மின்சாரத் தேவைக்காக மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்துதான் மின்சாரம் கொள்முதல் செய்ய முடியும். தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய முடியாது.

கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி என்பதால் ஒரு யூனிட்டுக்கு ரூ.29 உற்பத்தி செலவாகிறது. மேற்கு வங்கம் ரூ. 30-க்கும் கொள்முதல் செய்கிறது. ஆந்திரா போன்ற பல மாநிலங்கள் ரூ.30-க்கு மேல் வாங்கியுள்ளனர்.

தமிழக அரசு முதல் முறையாக வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள டெண்டர் முறையில் கொள்முதல் செய்கிறது.

ஏற்கெனவே புயலால் பாதித்த 14 மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.

ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் கடந்த திமுக ஆட்சியில் குறிப்பிட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் நிபந்தனைகள் இருந்தது. அதனை மாற்றி பல நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் நிபந்தனைகளை புதிதாக சேர்த்துள்ளோம். இதனால் டெண்டர் 2 மாதத்துக்கு தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது” என்றார்.

ரூ.135 கோடி மெத்தம்பெட்டமைன் கடத்திய தவெக நிர்வாகி கைது குறித்து கேட்டதற்கு, “தமிழகத்துக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் மூலம் புழக்கத்துக்கு வந்தது. தவெக ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவெகவினர் என்பதால் கட்சி சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திமுக ஆட்சியாக இருந்திருந்தால் மெத்தம்பெட்டமனை கோலப்பொடி என கூறி உண்மை வெளிவராமல் மூடி மறைத்திருப்பார்கள்.

திமுக ஆட்சியில் ராமநாதபுரத்தில் போதைப்பொருள் பிடிபட்டபோது, அதை உரங்கள் எனக் கூறி வழக்கை முடித்துவிட்டனர். தவெக ஆட்சியில் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என தமிழக முதல்வர் சொல்லியுள்ளார்” என்றார்.

மேலும், “இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்கள் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவிக்க முடியாது என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியாக வாதிடவில்லை எனக் கூறுவது தவறானது. இது தொடர்பாக இஸ்லாமிய கட்சியினர் மற்றும் நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட அனைவரையும் கலந்து ஆலோசித்துத்தான் முடிவெடுத்தோம்.

சட்டத் திருத்தம் செய்யலாமா அல்லது அப்பீல் போவோமோ என அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு ஆலோசித்த பின்புதான் அப்பீல் சென்றோம். தமிழக முதல்வர் ஒப்புதலுடன் மீண்டும் சட்டத் திருத்தம் செய்யவுள்ளோம். அரசாணை கொண்டுவந்தபோதே சிறு சட்டத் திருத்தம் செய்திருந்தால் போதும். அதனை முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறிவிட்டனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கனவுலகத்தில் இருக்கிறார். அவர் வேறு உலகத்தில் இருக்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டமும் செய்ய வில்லை” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல்குமார் </p></div>
“தவெக இப்போது ‘பிரேக்கிங் பேட்’ பார்ட்டி” - ‘மெத்’ கடத்தல் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in