“ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இடைத்தேர்தலில் தவெக வெற்றி” - அமைச்சர் நிர்மல் குமார்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: “திமுகவும், அதிமுகவும் இந்தத் தேர்தலில் உள்கூட்டு வைத்து வேலை செய்தார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருந்தார்கள். இனி வரும் தேர்தல்களிலும் இந்த வெற்றி தொடரும்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள், முதல்வர் விஜய்யின் 4 மாத நல்லாட்சிக்கான வெற்றி. இனி நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் தவெகவே வெற்றி பெறும். தமிழகத்தின் மாற்றத்துக்கான அரசாக தவெக அரசு இருக்கும்.

அதிமுகவும் திமுகவும் இந்தத் தேர்தலில் உள்கூட்டு வைத்து வேலை செய்தார்கள். ஆனால், மக்கள் தெளிவாக இருந்தார்கள். இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவும் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்துக்காகவும் தனது சொத்துகளையும் மகனையும் காப்பாற்றுவதற்காக ஸ்டாலினையும் உதயநிதியையும் ஆட்சியில் உட்கார வைக்க பாடுபடுகிறார். இவரை நம்பி மக்கள் எப்படிப் ஓட்டுப் போவார்கள்? அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம். அதிமுகவை லெட்டர்பேடு கட்சியாக மாற்றிவிட்டார்.

தாராபுரம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகத்தான் இருந்துள்ளது. அதிமுக பெற்ற வாக்குகளில் ஒன்றுகூட பழனிசாமிக்கானது அல்ல. இவை இரட்டை இலைக்கு விழுந்த ஓட்டுகள். தனது சுயநலனுக்காக அதிமுகவை அழித்துவிட்டார்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இடைத்தேர்தலில் பல நூறு கோடிகளை செலவு செய்தனர். தவெக ஒரு ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும் வெற்றி பெற்றுள்ளோம். அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் விஜய் தான் முடிவெடுப்பார். தேர்தல் எப்போது வந்தாலும், மக்கள் தவெக தலைவர் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஞானேஷ் குமார் விவகாரம்: குடியரசுத் தலைவர் உடன் இண்டியா கூட்டணி எம்பிக்கள் இன்று இரவு சந்திப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in