பொங்கலுக்கு முன்னர் 723 செவிலியருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

பொங்கலுக்கு முன்னர் 723 செவிலியருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Updated on
1 min read

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகைக்குள் 723 செவிலியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பணி நிரந்​தரம், சம வேலைக்கு சம ஊதி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 4-வது நாளாக பகல், இரவாக செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். கடும் பனி​யால் செவிலியர்​களில் பலருக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​டுள்​ளது. ஆனாலும் அவர்​கள் போராட்​டத்தை தொடர்​கின்​றனர். அதே​போல தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​களில் செவிலியர்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

இந்நிலையில், தமிழக சுகா​தா​ரத் துறை​யில் 10 ஆண்​டு​களாக தற்​காலிகப் பணி​யாளர்​களாக பணி​யாற்​றும் 8 ஆயிரத்​துக்​கும் கூடு​தலான செவிலியர்கள், தங்​களுக்கு பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் என்று 4 நாட்​களாக போராடி வரு​கின்​றனர். அவர்​களை பணி நிரந்​தரம் செய்ய முடி​யாது என்று தமிழக அரசு அறி​வித்​திருப்​பது, ஆட்​சி​யாளர்​களின் ஆணவத்​தைக் காட்​டு​கிறது என்று எதிர்க்கட்சிகள் செவிலியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

மேலும், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களின் கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என்று அரசு மருத்​து​வர் சங்​கங்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் இன்று மீண்​டும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள செவிலியர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செவிலியர்கள் போராட்டத்தில் உள்ள நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்கள். நிரந்தரப் பணியாளர்களைப் போலவே அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரியுள்ளார்கள். இது சம்பந்தமாக அரசு பரிசீலித்து வருகிறது. அதன் மீதும் விரைவில் முடிவெடுக்கும்.

இதுவரை இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆண்டுதோறும் காலிப்பணியடங்கள் தாண்டி 1300 செவிலியர்கள் முதல்வர் திறந்துவைத்த அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.

மேலும் 7400 ஒப்பந்த செவிலியர்கள் உள்ளனர். இவர்களுக்காக 723 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பொங்கலுக்கு முன்னர் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மற்றவை காலிப்பணியிடங்கள் உருவாகும் பட்சத்தில் படிப்படியாக நிரப்பப்படும். மேலும் அந்த காலிப்பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செவிலியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

பொங்கலுக்கு முன்னர் 723 செவிலியருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம், வெள்ளி விலை உயர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in