சகோதரரைத் தாக்கிய வழக்கு: சமரசம் எட்டப்படாததால் அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் ஆஜராக உத்தரவு

அமைச்சர் மரிய வில்சன்

அமைச்சர் மரிய வில்சன்

Updated on
1 min read

சென்னை: குடும்பப் பிரச்சினையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.

புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த வழக்கில், சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் இன்று 2-வது முறையாக அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், சமரச பேச்சுவார்த்தையில் இன்றும் தீர்வு எதுவும் எட்டப்படாமல் மீண்டும் வரும் 28-ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன், அவரின் சகோதரர் ஆகியோர் நேரில் ஆஜராக சமரச தீர்வு மையம் உத்தரவிட்டு பேச்சுவார்த்தையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

<div class="paragraphs"><p>அமைச்சர் மரிய வில்சன்</p></div>
“தமிழகத்துக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அரசு வலியுறுத்த வேண்டும்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in