

சென்னை: மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகள் தானமாக பெற்றதற்காக 23 செப்டம்பர் 2023 முதல் இதுவரை 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 259 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த ஹ.பிரின்ங்லின்(50) என்பவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினார்.
மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த கொடையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் 23, செப்டம்பர் 2023 அன்று அறிவித்த பிறகு, இதுவரை தமிழ்நாடு முழுவதும் விபத்தின்மூலம் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகள் தானம் செய்த 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.