கடந்த 2 மாதங்களில் 60 ஆயிரம் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடந்த 2 மாதங்களில் 60 ஆயிரம் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: வடகிழக்​குப் பரு​வ​மழை​யால், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள 4 குளங்​களில் நீர் நிறைந்​துள்​ளதை சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சென்​னை​யில் 160.86 ஏக்​கர் நிலப்​பரப்பை கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அரசு கையகப்​படுத்​தி​உள்​ளது. இதில், 118 ஏக்​கரில் ஒரு சுற்​றுச்​சூழல் பூங்கா அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்டு வேக​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த சுற்​றுச்​சூழல் பூங்​கா​வில், மழை நீர் சேமிக்​கும் வகை​யில் புதி​தாக 4 குளங்​கள் வெட்​டப்​பட்​டுள்​ளன. ஏற்​கெனவே இந்த மைதானத்​தில் 2 பெரிய குளங்​கள் இருந்​தன. அவை தூர்​வாரி அகலப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

அந்​தவகை​யில், 24.50 கோடி லிட்​டர் மழை நீரை சேர்த்து வைக்​கக்கூடிய அளவுக்கு 6 குளங்​கள் பயன்​பாட்டுக்கு வந்​துள்​ளன. வேளச்​சேரி பெருங்​குடி சாலை​யில் ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு நீர்ப் பாதை ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அங்கு இருந்த உபரி நிலங்​களில் 3.50 ஏக்​கர் நிலப்​பரப்​பில் இரண்டு பெரிய குளங்​கள் வெட்​டப்​பட்​டன. அங்கு 4.25 கோடி லிட்​டர் மழைநீர் தேக்கி வைக்​கப்​பட்டு பயன்​படுத்​தப்​படு​கிறது.

தமிழகத்​தில் மழைக்​காலங்​களில் ஏற்​படும் சாதாரண காய்ச்​சல் போன்ற பாதிப்​பு​கள் மட்​டுமே உள்​ளன. தொற்​று​ நோய் பாதிப்​பு​கள் இல்​லை. தேவை​யான இடங்​களில் மழைக்​கால சிறப்பு மருத்​துவ முகாம்​களை தொடர்ச்​சி​யாக நடத்தி வரு​கிறோம்.

அக்​.16-ம் தேதி முதல் இது​வரை நடமாடும் வாக​னங்​கள், மருத்​து​வக் குழுக்​கள் மூல​மாக 59,911 மருத்துவ முகாம்கள் நடத்​தப்​பட்​டு உள்ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

கடந்த 2 மாதங்களில் 60 ஆயிரம் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடப்புத்தக உருவாக்க பணி: டிச.26-க்குள் விண்ணப்பிக்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in