“பள்ளிக்கு வரும் மாணவர்கள் சரியாக முடிவெட்டவில்லை என்றால் மொட்டை அடியுங்கள்” - அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசம்

“பள்ளிக்கு வரும் மாணவர்கள் சரியாக முடிவெட்டவில்லை என்றால் மொட்டை அடியுங்கள்” - அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசம்
Updated on: 
1 min read

விருதுநகர்: பள்​ளிக்கு வரும்​போது மாணவர்​கள் சரியாக முடிவெட்​டிக் கொண்டு வர​வில்லை என்​றால் மொட்டை அடியுங்​கள் என்று அமைச்​சர் ஜெகதீஸ்வரி கூறினார்.

விருதுநகர் மாவட்​டம் மல்​லாங்​கிணறு அருகே அயன்​ரெட்​டியபட்​டி​யில் அரசுப் பள்​ளி​யில் சுற்​றுச்​சுவர் கட்​டுவதற்​கான அடிக்​கல்​நாட்டுவிழா நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் சமூக நலத்​துறை அமைச்​சர் ஜெகதீஸ்வரி பேசிய​தாவது: நம் வீட்​டுப் பெண் பிள்​ளைகளை​யும், ஆண் பிள்​ளைகளை​யும் நல்​லமுறை​யில் வளர்க்க வேண்​டியது பெற்​றோரின் முதற்​கடமை. குழந்​தைகளுக்கு குட் டச், பேடு டச் பற்றி சிறு வயதிலேயே தாயாகிய நீங்​கள் சொல்​லிக் கொடுக்க வேண்​டும்.

இன்​றைய பள்ளி மாணவர்​கள் நாகரி​கம் என்ற பெயரில் தலைமுடியை வித்​தி​யாச​மாக வெட்​டுவது மற்​றும் முறையற்ற ஆடைகளை அணிவது போன்ற செயல்​களில் ஈடு​படு​கின்​றனர்.

பள்​ளிக்கு வரும்​போது மாணவர்​கள் சரியாக முடிவெட்​டிக் கொண்டு வர​வில்லை என்​றால் மொட்டை அடித்து விடுங்​கள் அதில் தவறில்லை. முதல் தவறே அங்​கிருந்​து​தான் துவங்​கும். இதை உங்​கள் வீட்​டுப் பிள்​ளை​யாகத்​தான் சொல்​கிறேன்.

அதேபோல் முழங்​கால் வரை பேண்டை தூக்கி மடித்து விட்டு அதை ஃபேஷன் என்று சொல்​கிறார்​கள். இது எல்​லாம் தவறு. இது காவல்​துறை​யின் விசா​ரணை​யின்​போது தவறான தோற்​றத்தை ஏற்​படுத்​தக் கூடும். கடந்த காலங்​களில் கல்​வி​யில் விருதுநகர் மாவட்​டம் முதலிடத்​தைப் பெற்று வந்த நிலை​யில், கடந்த 2 ஆண்​டுகளாகச் சற்று பின்​தங்​கி​யுள்​ளது.

நடப்​பாண்​டில் நமது மாவட்​டம் மீண்​டும் கல்​வி​யில் முதலிடத்​தைப் பெற தேவை​யான அனைத்து நட​வடிக்​கைகளை​யும் கல்​வித்​துறை அதி​காரி​களு​டன் இணைந்து முழு​வீச்​சில் செயல்​படுவோம். தமிழக மக்​களுக்கு கொடுத்த வாக்​குறுதி​கள் அனைத்​தும் படிப்​படி​யாக நிறைவேற்​றப்​படு​கின்​றன என்​றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்​சர் வன்​னிஅரசு , மாவட்ட ஆட்சி​யர் ஷரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பள்ளிக்கு வரும் மாணவர்கள் சரியாக முடிவெட்டவில்லை என்றால் மொட்டை அடியுங்கள்” - அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசம்
ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ புயல்: 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று, 19 விமானங்கள் ரத்து

X