தேர்தல் வந்துட்டு இருக்குல்ல... ரஜினி பிறந்த நாளில் கேக் வெட்டிய அமைச்சர்!

தேர்தல் வந்துட்டு இருக்குல்ல... ரஜினி பிறந்த நாளில் கேக் வெட்டிய அமைச்சர்!
Updated on
1 min read

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் ஏற்படுத்திக் கொண்ட பந்தத்தை திமுக-வினர் இன்னமும் விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

காரணம், ரஜினிக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் அவரது ரசிகர்கள். அந்த வகையில், ரஜினியின் 75-வது பிறந்த நாளில் அவரது ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.

வரும் 2026 தேர்தலில் நடிகர் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்படும் நிலையில், அதைச் சமாளிக்கும் விதமாக திமுக தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரபல நடிகர்களின் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை திமுக செய்து வருகிறது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கும் அவரது ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் கீதா ஜீவன்.

தூத்துக்குடி ‘தெய்வீகத் தென்றல் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்’ சாா்பில் சண்முகபுரம் பகுதியில் ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன், ரஜினிகாந்த் உருவம் பொறித்த கேக்கை வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினார்.

மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அவர் பேசுகையில், ‘‘திரைப்படத் துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளதால் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரசிகர் மன்றங்களாக மட்டும் இல்லாமல் அவரது பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும்” என்றார்.அடுத்ததா எந்த ஸ்டாருக்கு பிறந்த நாள் வருதுன்னு அமைச்சர் கிட்டத்தான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்!

தேர்தல் வந்துட்டு இருக்குல்ல... ரஜினி பிறந்த நாளில் கேக் வெட்டிய அமைச்சர்!
'ஆபரேஷன்’ விஜய் - திமுகவின் ‘கிறிஸ்துமஸ்’ வியூகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in