“பேரவையில் பங்கேற்பதை தவிர்க்க திட்டமிட்டு உதயநிதி பேசினாரா?” - அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

அமைச்சர் அருண்ராஜ்

Updated on
1 min read

சென்னை: “சட்டப்பேரவை தொடரில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு உதயநிதி அப்படி பேசினாரா என்ற சந்தேகம் வருகிறது” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைத்து கட்சியினரும் உதயநிதி பேச்சை கண்டித்துள்ளனர். பெண்களை பற்றி யாரும் தரக்குறைவாக பேசக் கூடாது. பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். உதயநிதி ஏன் பொறுப்பற்ற முறையில் பேச வேண்டும்.

சட்டப்பேரவை தொடரில் பங்கேற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு உதயநிதி அப்படி பேசினாரா என்ற சந்தேகம் வருகிறது. யாரும் ஆதரவு தெரிவிக்க முடியாத அளவுக்கு ஏன் பேச வேண்டும். சட்டப்பேரவை நடக்க இருப்பது தெரியும். ஏன் பொறுப்பற்ற முறையில் பேச வேண்டும்? பெயரை குறிப்பிட வேண்டும் என்று இல்லை, எந்த பெண்ணாக இருந்தாலும் தவறு தவறுதான்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்துக்கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது. இந்த அரசு கடுமையான செய்தியை அனைவருக்கும் சொல்லும். இதுபோன்று முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி பேச கூடாது. தவெக பாரபட்சமின்றி செயல்படும். அரசியல் ரீதியாக என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் அருண்ராஜ்</p></div>
“பேரவைக்குள் வரவே உதயநிதிக்கு தகுதி இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in