சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது: பொது மக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது: பொது மக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் டெங்கு காய்ச்​சல் கட்​டுக்​குள் இருந்​தா​லும், பொது​மக்​கள் சுற்​றுப்​புற பகுதி​களில் தண்​ணீர் தேங்​காமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும் என்று சுகாதார அமைச்​சர் அருண்​ராஜ் கேட்​டுக்​கொண்​டார்.

சென்னை சோழிங்​கநல்​லூர் அரசு புறநகர் மருத்​து​வ​மனை​யில் சுகாதா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். அப்​போது, புறநோயாளி​கள் பிரிவு உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் அளிக்​கப்​படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்​டறிந்​தார்.

மருத்​து​வப் பணி​யாளர்​களின் வருகைப் பதிவை ஆய்வு செய்த அமைச்​சர், இதனை பயோமெட்​ரிக் முறைக்கு மாற்ற நட​வடிக்கை மேற்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தினார்.

மருத்​து​வ​மனை​யில் நடை​பெறும் பிரசவங்​களின் எண்​ணிக்கை, மருத்​து​வர்​கள், பயிற்சி மருத்​து​வர்​களின் எண்​ணிக்கை, அவர்​களின் பணி விவரம் குறித்​தும் மருத்​துவ அலு​வலர்​களிடம் அமைச்​சர் கேட்​டறிந்​தார்.

மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் ஏ.அர​விந்த், மருத்​து​வ​மனை​யின் கூடுதல் நிலைய அலு​வலர் கிறிஸ்டி ஜெயமுருகன், சோழிங்​கநல்​லூர் எம்​எல்ஏ இசிஆர் பி.சரவணன் ஆகியோர் உடனிருந்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் அருண்​ராஜ் கூறிய​தாவது: இந்த மருத்​து​வ​மனை 262 படுக்கை வசதி​யுடன் உள்​ளது. இப்​பகுதி​யில் உள்ள கர்ப்​பி​ணிகள் பிரசவத்​துக்​காக திரு​வல்​லிக்​கேணி கஸ்தூரிபா அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டிய நிலை உள்​ளது.

எனவே இந்த மருத்​து​வ​மனை 24 மணிநேர​மும் மகப்​பேறு சிகிச்சை வழங்​கும் வகை​யில் சீமாங் மைய​மாக தரம் உயர்த்​தப்​படும். மருத்​து​வ​மனை​யில் சிறப்பு மருத்​து​வர்​கள், 83 பயிற்சி மருத்​து​வர்​கள் உள்​ளனர். விரைவில் இவர்​களுக்​கான பணிகள் முறைப்​படுத்​தப்​பட்டு, மருத்​து​வ​மனை 24 மணிநேர​மும் இயங்​கும் வகை​யில் நட​வடிக்கை எடுக்​கப்​படும்.

தமிழகத்​தில் டெங்கு காய்ச்​சல் கட்​டுக்​குள் உள்​ளது. டெங்கு காய்ச்​சல் வராமல் தடுப்​ப​தில் பொது​மக்​களின் பங்​களிப்பு முக்​கிய​மானது. மழைநீர் தேங்​கும் இடங்​களில் கொசுப் புழுக்​கள் உற்​பத்​தி​யாகும்.

எனவே பொது​மக்​கள் தங்​கள் வீடு மற்​றும் சுற்​றுப்​புற பகுதி​களில் தேவையற்ற பொருட்​களை அப்​புறப்​படுத்தி தண்ணீர் தேங்​காமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும். கொசு ஒழிப்பு பணி​யாளர்​கள் தினமும் ஆய்வு மேற்​கொண்டு வரு​கின்​றனர். அவர்​களுக்கு முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது: பொது மக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
‘குற்றவாளிகளுக்குப் பயமில்லை’ - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

X