வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் வாக்குவாதம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு
திருச்செந்தூர் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினரிடம் ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேள்வி கேட்டு  பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினரிடம் ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேள்வி கேட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

Updated on
1 min read

தூத்துக்குடி: ​திருச்செந்தூர் அருகே கல்​விளை கிராமத்​தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்​குறு​தி​களை நிறைவேற்​றவில்லை என குற்றம்சாட்டி பொது​மக்​கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரி​வித்​து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர் திரும்​பிச் சென்​றார்.

சட்​டப்​பேரவைத் தேர்​தலில் திருச்​செந்​தூர் தொகு​தி​யில் திமுக சார்பில் வேட்​பாள​ராக அறிவிக்கப்பட்ட அமைச்​சர் அனிதாராதாகிருஷ்ணன் 7-வது முறை​யாக போட்​டி​யிடு​கிறார். இதற்காக கடந்த 30-ம் தேதி வேட்புமனு தாக்​கல் செய்த இவர், பிரச்​சா​ரத்தை தொடங்கி ஒவ்​வொரு ஊராகச் சென்று வாக்கு சேகரித்து வரு​கிறார்.

இதன் ஒருபகுதியாக உடன்​குடி மேற்கு ஒன்​றி​யம் செம்​மறிகுளம் ஊராட்சி பகு​தி​களான ராமசுப்​பிரமணி​யபுரம், வலசைகிணறு, கல்​விளை, பூலிகுடி​யிருப்​பு, அணைத்​தலை ஆகிய கிராமங்​களுக்கு நேற்று காலை வாக்​குசேகரிக்க, அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதர​வாளர்​களு​டன் ஜீப்​பில் சென்​றார்.

ஒவ்வொரு கிரமாமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் கல்​விளை கிராமத்​துக்கு சென்​றார். அப்​போது, அங்கு திரண்​டிருந்து பெண்​கள் மற்​றும் பொது​மக்​கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும்போது, “இதற்கு முன்பு தேர்​தல் வாக்​குறு​தி​யாக கொடுத்த அடிப்​படை வசதி​களை எங்கள் கிராமத்தில் நிறைவேற்​றித் தர​வில்​லை.

கிராமத்தில் கோயில் கட்​டு​வதற்கு உதவியும் கேட்​டோம். அதற்கும் உதவி செய்​ய​வில்​லை. இப்​போது மட்டும் எதற்​காக வாக்கு கேட்டு எங்கள் கிராமத்துக்கு வந்​தீர்​கள் என்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​களிடம் கேள்வி கேட்டு வாக்​கு​வாதம் செய்​தனர்.

அவர்களை சமாதானம் செய்ய முயன்ற நிலையில், வாக்குவாதம் தொடர்ந்ததால், அனிதா ராதாகிருஷ்ணன் வந்த வாக​னம் அங்​கிருந்து வேக​மாக வெளி​யேறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

<div class="paragraphs"><p>திருச்செந்தூர் அருகே உள்ள கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுகவினரிடம் ஏன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேள்வி கேட்டு  பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.</p></div>
“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் திடீர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in