

சிவசங்கர்
பெரம்பலூர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கி பேச வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, திமுக மீதும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும்.
நாங்களும் அமைதியாக இருப்பது இல்லை. திமுகவினரும் வாக்குவாதம் செய்யத் தயார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்று சில நாட்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள் தவெக ஆட்சி மீது மக்கள் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை. அமமுக எம்எல்ஏவை, சட்டபேரவையில் வைத்து தன் பக்கம் இழுத்து கொண்டது, குதிரை பேரம் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.