“திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - ஆதவ் அர்ஜுனா @ மதுராந்தகம்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் 

Updated on: 
1 min read

மதுராந்தகம்: “திமுக ஆட்சியில் திமுக குடும்பத்துக்குத் தெரியாமல் ஒரு எஃப்ஐஆர் போட முடியுமா? வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு யார் காரணம்? உங்களுடைய குடும்ப அழுத்தமா? மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து பதில் சொல்ல வேண்டும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து, முதல்வர் விஜய் இருந்த மேடையில் ஆதவ் அர்ஜுனா பேசியது: “தேர்தலுக்கு முன் 12 மீட்டிங் தான் முதல்வர் விஜய் பேசினார். திமுக தலைவர், திமுக பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். 15 அமைச்சர்கள் அவுட் ஆகினர். இதுவரை திமுக வரலாற்றில் திமுக தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் தோற்றதே இல்லை. இவர்கள் அனைவரும் யாரிடம் தோற்றார்கள்... சாமானியர்களிடம் தோற்றார்கள்.

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய்யின் அரசு சமரசம் செய்து கொண்டதே இல்லை. திமுக ஆட்சியின்போது ஜெம் வீரமணி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? போக்சோ வழக்கு குறித்து நானும், நிர்மல் குமாரும் பேச தடை விதிக்க வேண்டும் என்கிறது திமுக. ஜனநாயகம் அற்ற செயலை திமுக செய்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஏடிஜிபி மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திமுக ஆட்சியில் திமுக குடும்பத்துக்குத் தெரியாமல் ஒரு எஃப்ஐஆர் போட முடியுமா? வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு யார் காரணம்? உங்களுடைய குடும்ப அழுத்தமா? மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து பதில் சொல்ல வேண்டும்.

1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார். திமுக ஏன் கொண்டுவரவில்லை? பாஜவின் மீது பழிபோட்டு தப்பிவிட்டனர்.

மரகதம் குமரவேலுக்கு பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர். சீட் கொடுத்தவர் ஜெயலலிதா. தற்போது திமுகவை உண்மையாக எதிர்க்கும் தலைவரின் தலைமையிலான கட்சியில் இணைந்துள்ளார்.

தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றி பெற்றவர் பழனிசாமி. பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத நாங்கள், மரகதம் குமரவேலுக்கு பணம் கொடுத்திருப்போமா?

தவெக வேட்பாளர் அருண் குமாரை விலைக்கு வாங்கி, தேர்தல் முடிந்ததும் அவரை அதிமுகவில் இணைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறும் வெற்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கான வெற்றியாக மாற வேண்டும்.

வீரமணி மீதான வழக்கை முடிக்க ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீரமணி மீதான வழக்கை முடித்தது ஏன் என ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இது குறித்து விசாரித்து அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கபப்டும்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்&nbsp;</p></div>
“ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை காங். போராட்டம் தொடரும்” - நாராயணசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in